Header

Sri Lanka Army

Defender of the Nation

30th September 2021 14:32:50 Hours

களுத்துறையில் 'உலக இருதய தின' அனுட்டிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக இராணுவ தளபதிக்கு அழைப்பு

களுத்துறை – நாகொடை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலையில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற “உலக இருதய தின” அனுட்டிப்பு நிகழ்விற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர், இருதய நோய் நிபுணர்கள் மற்றும் பலரின் பங்கேற்புடன் “உலக இருதய தின” நிகழ்வுக அனுட்டிக்கப்பட்டது.

இருதய சிகிச்சை நிபுணரும் கொரோனா பராமரிப்பு பிரிவின் ஆலோசகருமான வைத்தியர் வசந்தி நாணயக்கார, களுத்துறை மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களால் பிரதம விருந்தினருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் இருதய சிகிச்சை அலகுகளை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையின் நினைவு பதிவேட்டில் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது எண்ணங்களை பதிவிட்டார். பின்னர் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற இருதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிவப்பு பலூன்களை காற்றில் பறக்கவிடுதலில் பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் இணைந்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது பிரதம விருந்தினரரை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அவர்களால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் அன்பான் கோரிக்கையை ஏற்று உரை நிகழ்த்திய ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி முயற்சிகளை பாராட்டியதோடு இருதயநோய் தொடர்பிலான விழிப்புணர்வு திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் வைத்திய பயிற்சியாளர்கள், தாதியர்கள், உதவி வைத்தியர்கள் மற்றும் சில நோயாளிகளும் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29 ஆம் திகதி 'உலக இருதய தினம்' அனுட்டிக்கப்படுகிறது. இதய நோய் மற்றும் மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற நோய்கள் தொடர்பாக மக்களின் அவதானத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தினம் அனுட்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். இந்த தொகை எச்.ஐ.வி, மலேரியா மற்றும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். உலக இதய தினம் 2000 ஆம் ஆண்டில் உலக இதய கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டு. அவ்வருடத்திலுருந்து அனுட்டிக்கப்பட்டு வருகிறது.