Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2021 11:25:04 Hours

மொஸ்கோவில் இராணுவ குத்துச்சண்டை வீரர் மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம்

மொஸ்கோவில் உள்ள தேசபக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 231 குத்துச்சண்டை வீரர்களின் பங்கேற்புடன் 2021 செப்டம்பர் 19-26 வரை நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கு பத்து எடை பிரிவுகளிலும் பெண்களுக்கு ஐந்த பிரிவுகளிலும் போட்டிகள் இடம்பெற்றன., வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. அவர்களில் 49 கிலோ எடைப் பிரிவில் சிறந்து விளங்கிய இலங்கை இராணுவ கவச வாகனப் படையின் லான்ஸ் கோப்ரல் சஜீவ நுவன் வெண்கல பதக்கத்தை வென்றார்.

மேற்படி போட்டிகளில் முப்படைகளில் சேவையிலிருக்கும் மற்றும் சிவில் குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய 23 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களில் இலங்கை விமானப்படையின் பெண் குத்துச்சண்டை வீராங்கனை கயானி களுஆராச்சி வெண்கலப் பதக்கம் வென்ற முதல் பெண் குத்துச் சண்டை வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்தார்.

வெண்கலப் பதக்கம் வென்ற, லான்ஸ் கோப்ரல் சஜீவ நுவன், லாட்டன் கிண்ணம் 2019- (தங்கம்), கிளிப்போர்ட் கிண்ணம் 2019- (தங்கம்), தேசிய சாம்பியன்ஷிப் - 2019 (தங்கம்) உட்பட பல முன்னைய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருந்தமையும். சர்வதேச போட்டிகள் சிலவற்றில் பங்கேற்றிருந்தையும் குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்த தோற்கடிக்க முடியாத திறன்கள் காரணமாக சைபீரியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பில் பங்கேற்பதற்கான ஒரே குத்துச்சண்டை வீரராக இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, இவருடன் ரஷ்யா பயணித்த குழுவிற்கு மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் நடுவர் பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடு, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் தலைவர் கேணல் ஹெர்வே பிசிரில்லோ, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் உமர் கிரெம்லேவ், ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கிரில் ஷெகுட்டியேவ், சாம்பியன்ஷிப் - ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோகபூர்வ தூதுவரும் உலக சாம்பியன் மற்றும் ஐரோப்பிய சாம்பியன், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றவரான, உலக இராணுவ சாம்பியன் கேணல் அலெக்சாண்டர் லெப்ஜியாக், அத்துடன் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் இராணுவ கழக மற்றும் ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பின் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

58 வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்ய ஒன்றிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிகோலாய் பங்கோவின் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவரது உரையின் வரவேற்புரையின் போது ரஷ்ய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யாவின் இராணுவ ஜெனரலுமான செர்ஜி ஷோய்கு அவர்களை வரவேற்றார்.