Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2021 10:07:24 Hours

11 வது படைப்பிரிவின் பங்களிப்புடனான புதிய கொவிட் வார்டின் நிர்மாண பணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் பராட்டு

கண்டி தேசிய வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கை ஏற்று இராணுவ தளபதியின் கட்டளைக்கிணங்க மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவு சிப்பாய்களால் வைத்தியசாலை வளாகத்தில் பகுதி அளவில் நிர்மாணிக்கப்ட்டிருந்த கட்டிடம் ஒன்று ஒரு வாரத்திற்குள் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது.

கண்டி கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் 11 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்திற்கு அண்மையில் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இரேஷ பெர்ணாண்டோ அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியசாலை வளாகத்திற்குள் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடம் மத்திய மாகாண பகுதியில் தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தகூடிய வகையில் 11 வது படைப்பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்டது.

அதனையடுத்து மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழான மேற்படி திட்டத்திற்கு 100 இரும்பு கட்டில்களை இலவசமாக வழங்கி வைக்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி சிகிச்சை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வு சனிக்கிழமை (25) நடைபெற்ற போது நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மத்திய மாகாண ஆளுநருடன் கலந்துகொண்டிருந்ததோடு, வைத்தியசாலை பணிப்பாளர் இராணுவத்தின் பங்களிப்பை பாராட்டி நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார். இராணுவத்தின் சார்பில் நிர்மாண குழுவிற்கு தலைமைத்துவம் வழங்கி கெப்டன் நிலை அதிகாரி மற்றும் படைப்பரிவு தளபதி ஆகியோரால் நினைவுச் சின்னம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து குறுகிய காலத்தில் கட்டுமான பணிகளை நிறைவு செய்தமைக்காக கௌரவ அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் படையினரை பாராட்டினர். அத்தோடு தொற்று நோய் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட அர்பணிப்பான சேவைக்கு கண்டி தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் நன்றிகளை தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மேற்படி வார்ட்டின் நிர்மாண பணிகளுக்கான செலவுகள் நன்கொடையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.