Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2021 22:07:24 Hours

ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணி எச்.எஸ்.பி.சி வங்கியுடன் இணைந்து 300 பல்ஸ் ஒக்ஸிமீட்டர்கள் பரிசளிப்பு

இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இணைந்து முன்னெடுக்கும் கொவிட் -19 உதவி எண் 1904 மற்றும் வைத்தியர் அழைப்பு எண் 247 ஊடான கொவிட் -19 தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தங்கள் சொந்த வீடுகளில் அல்லது வேறு இடங்களில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணியின் (A-PAD) இலங்கைக்கான பணிப்பாளர் திரு ஃபிர்ஸான் ஹாசிம் வெள்ளிக்கிழமை (24) ம் திகதி பிற்பகல் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் 300 பல்ஸ் ஒக்சிமீட்டர்களை கையளித்தார். இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் உடல்நிலைகளை நேரடியாக மருத்துவர்களிடம் தெரிவிக்க முடியும்.

கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் திட்டத்தின் முன்னோடிகளான ஆசிய பசிபிக் பொதுச் சுகாதாரக் கல்வி கூட்டமைப்பு உதவி தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மற்றும் வைத்தியர் பத்மா குணரத்ன தலைமையிலான இலங்கை மருத்துவ சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எச்.இஸ்.பி.சி வங்கியின் நிதி உதவியுடன் ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணியின் (A-PAD) இந்த நன்கொடையினை வழங்கியது.

கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து குறித்த வீட்டில் சிகிச்சைப் பெறும் கொவிட் தொற்றாளர்களின் குருதியில் ஒக்ஸிஜன் அளவினை கணிக்கும் கருவிகளை உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொண்ட ஜெனரல் சவேந்திர சில்வா எச்-எஸ்-பி-சி வங்கி மற்றும் ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணி, அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

குணப்படுத்தும் செயல்பாட்டில் பல்ஸ் ஒக்ஸிமீட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி பிரச்சினை காரணமாக ஒக்ஸிமீட்டர்கள் உரிய நேரத்தில் இன்மையால் சிலருக்கு கடுமையான சுவாச பிரச்சினைகள் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமையினால் மரணத்திற்கும் காரணமானது.

ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணியின் (A-PAD) சட்ட ஆலோசகரும் தகவல் தொடர்பு நிபுணருமான திருமதி வஜினி ஹேரத் குணரத்ன, ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ கூட்டணி உறுப்பினர்கள், மற்றும் எச்.எஸ்.பி.சி வங்கியின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.