Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2021 19:54:27 Hours

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு வெள்ளிக்கிழமை (24) தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் – கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்

அதிமேதகு ஜனாதிபதி நியூயோக் நகரிலிருந்து நேற்று (21) வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் வரும் வெள்ளிக்கிழமை (24) முதல் விஷேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைவாக விஷேட தேவையுடைய வயது 12-19 வது இடைப்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (22) ஊடக வெளியிடு ஒன்றினூடாக தெரிவித்தார்.

இந்தத் திட்டம் முதலில் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் பின்னர் 15-19 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு பிற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள அவர் . கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் மற்றும் சந்தித்த பல்வேறு சிரமங்களின் விளைவாக கொவிட் -19 வைரஸ் தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இன்று (22) காலை நிலவரப்படி, 1,321 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகப்படியாக 170 தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும், பாணந்துறை தெற்கில் 49, களுத்துறை வடக்கில் 30, பண்டாரகம மற்றும் களுத்துறை தெற்கில் தலா 18 என பதிவாகியுள்ளனர்.

அதன்படி, களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 436 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் 885 தொற்றாளர்கள் என பதிவாகியுள்ளனர். அவை பின்வருமாறு மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 78, குருநாகல் மாவட்டத்தில் 77, கேகாலை மாவட்டத்தில் 74, அம்பாறை மாவட்டத்தில் 73 காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 , அனுராதபுரம் மாவட்டத்தில் 47, மாத்தளை மாவட்டம் 43, மாத்தறை மாவட்டத்தில் 40, கிளிநொச்சி மாவட்டத்தில் 31, நுவரெலியா மாவட்டத்தில் 16, வவுனியா மாவட்டத்தில் 24 மற்றும் கண்டி மாவட்டத்தில் 25, திருகோணமலை மாவட்டத்தில் 04 , மன்னார் மாவட்டத்தில் 04, பதுளையில் 41, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10, முல்லைத்தீவு மாவட்டத்தில் 26, பொலன்னறுவை மாவட்டத்தில் 40 மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 22 .

இதன் முழுமையான வீடியோ கீழே