Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2021 16:08:38 Hours

அனர்த்ததிற்கு பதிலளிக்கும் வகையில் 222 வது பிரிகேட் படையினர் மணல் மூட்டைகளைக் கொண்டு கால்வாய் அமைப்பு

நிலவும் வானிலை மாற்றம் காரணமாக கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் மட்டம் குறைந்துவிட்டதால் கந்தளாய் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அதிகார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மகாவலி ஆற்றில் இருந்து கந்தளாய் நீர் சுத்திகரிப்புக்கு நிலைக்கு தண்ணீர் கொண்டு செல்ல கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் படையினர் மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிகமாக ஒரு கால்வாயினை அமைத்தனர்

22 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிகாரையின் அறிவுறுத்தலின் பேரில் 222 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 22 வது விஜயபாகு காலாட்படை மற்றும் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணின் படையினர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அதிகார சபையுடன் இணைந்து கடந்த வௌ்ளிக் கிழமை (10) நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு போதுமான நீரினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

இந்தத் திட்டத்தின் காரணமாக 15,000 க்கும் அதிகமான நுகர்வோர் தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தொடர்ந்தும் பெறுவார்கள்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரியவின் ஆலோசணைக்கமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.