Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2021 15:22:50 Hours

குருநாகல் மாவட்ட தலசீமியா நோயாளிகளுக்காக விஜயபாகு படையினர் இரத்த தானம்

தேசிய தலசீமியா மையத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேல் மாகாணத்தில் வசிக்கும் தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு குருணாகல் போயகனே விஜயபாகு காலாட்படை தலைமையகம் HQ (VIR) கடந்த புதன்கிழமை (15) இரத்ததான நிகழ்வை முன்னெடுத்தனர்.

அடிக்கடி இரத்தமாற்றம் செய்வதன் மூலமும் இந்த கடுமையான இரத்தக் கோளாறைக் கட்டுப்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் விலைமதிப்பற்ற இந்த திட்டத்தை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களினால் இராணுவ முலோபாய திட்டம் 2020 – 2025 அமைவாக தேசிய கோரிக்கையாக கருதி உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குருநாகல் மாவட்டத்தில் அதிகநோயாளிகள் இருப்பதை அறிந்து மொத்தம் 160 சிற்பாய்கள் இந்த திட்டத்தின் போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இரத்த தானம் செய்தனர். குருநாகல் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் குருநாகல் தேசிய தலசீமியா மையத்தில் உள்ள மருத்துவ ஊழியர்கள், நாட்டின் மிகப்பெரிய இரத்தமாற்ற மையத்திற்கு தேவையான இரத்தப் தொகுதியை சேகரிக்க அங்கு இருந்தனர். ஒவ்வொரு நோயாளிக்கும் நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 1 பைண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட இரத்தம் தேவைப்படுகின்றன. தற்போது சுமார் 2,500 நோயாளிகள் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்திய புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50-60 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், தொற்றுநோயின் தொடர்ச்சியான தாக்கத்திற்கு மத்தியில் இரத்த வங்கியில் இரத்தத்தின் பற்றாக்குறை காரணமாக இரத்தமாற்றத்திற்கு ஒரு சவாலான பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கமைய விஜயபாகு காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் சுனிமல் ஹேமரத்ன மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரி சிலரும் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் தலசீமியா நோயாளிகளின் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆதரவிற்கும் தாராள மனப்பான்மைக்கும் வைத்திய ஊழியர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.