Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2021 09:15:53 Hours

வரலாற்று சிறப்புமிக்க 'மிரிசவெட்டிய' விகாரையின் இறுதிநாள் பூஜைகளுக்கு இராணுவ தளபதிக்கு அழைப்பு

இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளிலில் இருந்து கொவிட் - 19 வைரஸ் தொற்று நோய் பரவலை ஒழிப்பதற்காக ஆன்மீக ஆசிர்வாதங்களை வேண்டி அனுராதபுரம் புனித மிரிசவெட்டிய விகாரை வளாகத்தில் ஒரு வார காலத்திற்கான (சத்தி பிரித்) பாராயணம் செய்யும் பௌத்த வழிபாட்டு நிகழ்வுகள் திங்கள்கிழமை (13) மாலை நிறைவடைந்தன.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மேற்படி வழிபாட்டு நிகழ்வுகள் செப்டெம்பர் 6 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்திற்கு மகா சங்கத்தினரால் பகல் மற்றும் இரவு வேலைகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ தேனுக விதானகமகே விளையாட்டுதுறை உட்கட்டமைப்புச் மேம்பாட்டு செயலாளர்கள் , பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மேற்படி மூன்று நிறுவனங்களினதும் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இறுதி நாள் நிகழ்வில் மகா சங்கத்தின் உறுப்பினர்களான எட்டு வழிபாட்டு பகுதிகளை கொண்ட வழிபாட்டு தளத்தின் நாயக்க தேரர் (அட்டமஸ்தானாதிபதி) வண. சிறிநிவச நாயக்க தேரர், ருவன்வெலிசாயவின் தலைமை நாயக்க தேரர் வண. பல்லேகம ஹேமரத்தன தேரர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கு மாத்திரமே இங்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்துடன் அவர்கள் சகலரும் 'ஹமர தேசனாவா' (இறுதி நாள் சொற்பொழிவு) மற்றும் மகா சங்கத்தினரின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.