Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2021 08:00:17 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டேவத்தவுக்கு இராணுவத் தளபதியின் பாராட்டு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்பு சேவையின் பின்னர் இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றிய கெமுனு ஹேவா படையணியின் மிக சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டவத்த, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்காக இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (19) காலை வருகைத்தந்தார்.

ஜெனரல் சவேந்திர சில்வா இந்த சந்திப்பின் போது நினைவுகளைப் புதுப்பித்து, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டவத்தாவுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், அவ்வேளையில் அவர் வகித்த மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பாளர் நாயகம், நிறுவனத்திலும் குறிப்பாக கெமுனு ஹேவா படையின் நியமனங்கள் குறித்து பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டவத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஒரு அச்சமற்ற போர்வீரராக போர் முடிவடைவதற்கு முன்பு பயங்கரவாதத்திற்கு எதிரான பல தாக்குதல்களுக்கு தீவிரமாக பங்களித்தார். மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டவத்த, மனிதாபிமான நடவடிக்கைகளின் முக்கியமான தருணத்தில் 17 வது கெமுனு ஹேவா படையணியின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்தார். தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடம் இருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிடும் போது, பதவி ஓய்வு பெறும் சிரேஸ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்தார். உரையாடலின் முடிவில், ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்றவருக்கு மூன்று தசாப்தத்திற்கும் மேலாக இராணுவத்திற்கான சேவையின் பாராட்டு மற்றும் பாராட்டுக்கு அடையாளமாக ஒரு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் கீர்த்தி கோட்டவத்தா ஒர் அனுபவமிக்க மற்றும் தொழில்துறையில் சிரேஸ்ட அதிகாரியாக எப்போதும் தனது மதிப்புமிக்க அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். வருங்கால சந்ததியினரின் நலன்களுக்காக பல புத்தகங்களின் ஆசிரியராகவும் இணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் மின்னேரியா காலாட் படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி பயிற்சி பிரிவு உள்ளிட்ட முக்கி ஆலோசகர பதவிகளை வகித்துள்ளதடன் இலங்கை தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதியாகவும் சேவையாற்றியுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு அவரது தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு சேவைகளை பாராட்டி மேஜர் ஜெனரலுக்கு சில வருடங்கள் அவர் செய்த களங்கமற்ற சேவைக்காக ரண விக்கிரம பதக்கம் (RWP) , ரண சூர பதக்கம் (RSP) மற்றும் உத்தம சேவா பதக்கம் (USP) என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.