Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2021 06:32:39 Hours

வீட்டில் சிகிச்சைபெறுபவர்களி நலனுக்காக இலங்கை மருத்துவ சங்க நிபுணர்கள் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் நன்கொடை

1904 அல்லது டொக்டர் கோல் 247 ஊடான வீட்டிலேயே சிகிச்சை அடிப்படையிலான கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சைப் பெறும் முறையினை கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைத்துடனான முழுமையாக ஒருங்கிணைப்பில் ஆதரிக்கும் டாக்டர் பத்மா குணரத்ன தலைமையிலான இலங்கை மருத்துவ சங்கத்தின் (எஸ்எல்எம்ஏ), மருத்துவ நிபுணர்கள் இன்று (01) பிற்பகல் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களின் அவசர தேவைக் கருதி விநியோகிப்பதற்காக பல்ஸ் ஒக்சிமீட்டர் உயிர்காக்கும் கருவிகள் 250 யை நன்கொடையாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைத்திடம் வழங்கினர்.

சுமார் ஒரு மில்லியன் மதிப்பிலான கொவிட் சஹான' நலக் கிளையின் முதல் தொகுதினை கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைத்தின் வாராந்த கூட்டத்தின் நிறைவில் சங்கத்தின் தலைவி வைத்திய நிபுணர பத்மா குணரத்ன பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன்னிலையில் வழங்கினார்.

சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பேராசிரியர் இந்திக கருணாதிலக மற்றும் டாக்டர் ருவைஸ் ஹனிஃபா மற்றும் சங்கத்தின் உதவித் தலைவர் டாக்டர் மணில்கா சுமனதிலக ஆகியோர் சங்க பிரதிநிதிகளுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அறிமுகப்படுத்தப்பட்ட 1904 மற்றும் டொக்டர் கோல் 247 ஊடான வீட்டிலேயே கொவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை முறையில் குறைவருமானம் பெறுபவர்களுக்கு தொலைப்பேசி ஊடாக சிகிச்சை வழங்கலை ஒருங்கிணைப்பதில் ஒக்சிட்டர் இன்மையால் காணப்பட்ட இடர்கள் இதன் ஊடாக தீர்க்கப்பட்டு விளைத்திறனான சிகிச்சையினை வழங்க முடியும்.

வீடுகளில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்களின் இரத்தத்தின் ஒக்ஸிஜன் அளவை கணிக்கக்கூடிய கருவிகளை நன்கொடை செய்தமைக்காக இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களிக்கும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக ஜெனரல் சவேந்திர சில்வா நன்றி தெரிவித்தார்..