Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2021 15:00:09 Hours

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள ஆட்சேர்ப்பாளர்கள் கூட்டாக தொழில்முறை வீரர்களாக விடுகை

யாழ்ப்பாணம் விடத்தல்பாளையிலுள்ள படையணி பயிற்சிப் பாடசாலையில் (BTS) பயிற்சி பெற்ற முந்நூற்று நாற்பது (340) பேர் வியாழக்கிழமை (26) தங்கள் நான்கு மாத கால அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு ஒரு எளிய விடுகை அணிநடை விழாவோடு வெளியேறினர்.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களையும் கொண்ட அனைத்து இனத்தின் தொழில்முறை வீரர்களாக மாற்றிய பின்னர் இராணுவத்திற்கு புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக ஆள்சேர்ப்பது இதுவாகும். இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு முலோபாயம் - 2020 - 2025' க்கு இணங்க அந்த முந்நூற்று நாற்பது பேரும் தங்கள் தாய் மொழிகள் வேறுபட்டாலும் ஒரு குடும்பத்தின் சகோதரர்களாகப் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி நிலையத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரின் அழைப்பின் பேரில் 522 பிரிகேட் தளபதி கேணல் சுசந்த ஹெட்டிகே விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் . அங்கு பிரதம அதிதி உரையாற்றுகையில் சிப்பாயின் பொறுப்புகள் மற்றும் ஒழுக்கத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம், கடமைகளின் சரியான செயல்திறன் போன்றவை தொடர்பாக எடுத்துரைத்தார். படையினர் ஒரு அரச மற்றும் மனித பாதுகாப்பின் மூலக்கல்லாகும், ஆனால் அவர்களின் சட்டபூர்வமான மற்றும் செயல்திறன்ஆனது ஜனநாயக, குடிமக்கள் கட்டுப்பாடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் தங்கள் பணியை நிறைவேற்றுவதைப் பொறுத்தது காணப்படுகின்றது.

சமரசம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்பை அடையாளப்படுத்தும் வீரர்கள் விதத்தால்பலை பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்சி ஆலோசக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம் செனவிரத்னவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்றனர்.

பயிற்வியாளர் எம். வினுசிகன் சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கானவிருதைப் பெற்றார், பயிற்வியாளர் ஜி.எஸ்.கே.எம் ஆராச்சி, சிறந்த பயிற்வியாளருக்கான விருதைப் பெற்றார் மற்றும் பயிற்வியாளர் இ.டி குமாரா சிறந்த உடல் தகுதிக்கான விருதைப் பெற்றார். அவர்கள் அன்றைய பிரதம அதிதியிடமிருந்து அந்த அந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர். விழாவில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வேறு சில தரப்பினரும் குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிகழ்வில் பங்கேற்றனர்.

நாட்டின் சுகாதார நலைமையை மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகள் காரணமாக, புதிய பயிற்சியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்படவில்லை.