Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2021 10:00:44 Hours

மனித உரிமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்ட பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை ஆரம்பம்

இலங்கை பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் ரசிக குமார, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித சட்ட (HR & IHL) பணிப்பகத்தின் 22 ஆவது பணிப்பாளராக வியாழக்கிழமை (19) இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மத வழிபாடுகளுக்குப் பிறகு தனது கடமையேற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த நியமனத்திற்கு முன், இவர் 213 வது பிரிகேட்டின் தளபதியாக சேவையாற்றினார் . மேஜர் ஜெனரல் கீர்த்தி கொட்டவத்தை இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த பதவியேற்பில் பங்கு கொண்டனர்.