Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2021 15:27:00 Hours

படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு “சிரச வீடு” திம்பிரிகஸ்வெவ ஏழை குடும்பத்திற்கு வழங்கி வைப்பு

ஹபரன திம்பிரிகஸ்வெவ பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்கான “சிரச நிவாஸ” வீடமைப்பு திட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 3 வது இலங்கை பொறியியல் சேவை படையினர், 3 வது இலங்கை இராணுவ போர்க்கருவிகள் படையினர், 5 வது இலங்கை இராணுவ வைத்தியப்படை மற்றும் முன்னரங்கு பராமரிப்பு பிரதேச சிப்பாய்கள் ஒன்றிணைந்து கட்டுமான பணகைளை முன்னெடுத்தனர். எம்டீவி/ எம்பீசி வலையமைப்பின் கோரிக்கைக்கு இணங்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய இராணுவ தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவி இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

அதனையடுத்து நன்கொடையாளர்களின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், எம்டீவி/எம்பீசி வலையமைப்பின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் திரு பிரியந்த விஜேசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை (14) இடம்பெற்ற “சிரச நிவச” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை திறந்து வைக்கும் நிகழ்வில் குறித்த வீடு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

வறுமை காரணமாக பரிதாபமான நிலையில் வாடிய திருமதி கே.ஜி. பேபினோனா என்பவரின் வாழ்க்கை நிலையை கவனத்திற்கு கொண்டு நிர்மாண பணிகளுக்கான செலவுகளை வழங்கிய நன்கொடையாளர்கள் இராணுவத் தளபதிக்கு இராணுவ மனிதவளம் மற்றும் அவர்களின் கட்டுமானத் திறன்களைத் அவசியத்தை தெரியபடுத்தியிருந்தனர்.

பாரம்பரிய மரபுகளுக்கமைய நிகழ்வின் பிரதம விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களால் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. பயனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம விருந்தினராக வீட்டை திறந்து வைத்ததோடு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் தங்களது தொழில்நுட்ப திறனை கொண்டு பொறியியல் மற்றும் ஏனைய படையினர் இணைந்து குறுகிய காலத்துக்குள் 'சிரச நிவாஸ' திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் வளங்களைக் கொண்டு திட்டத்தை நிறைவு செய்தனர்.

நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் பயனாளிகளுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் மேற்படி பிரதேசத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் தலா ரூ .1500/= பெறுமதியான 350 உலர் உணவு பொதிகளும் விநியோகிக்கப்பட்டன. ஹபரன திம்பிரிகஸ்வெவ விகாரையின் மகாநாயக்க தேரர் வண. புதுனுகம சுஜாத தேரர் வறிய குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கும் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார். அதனையடுத்து பெறுமதிமிக்க அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்த திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் பயனாளிகளுக்கு உதவித் தொகையையும் வழங்கி வைத்தார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய, கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன, சிரச ஊடக வலையமைப்பு அதிகாரிகள், சமூக தலைவர்கள் பயனாளிகளின் உறவினர்கள் நலன் விரும்பிகள் என சகலரும் பங்கேற்றனர். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தால் வழங்கப்பட்ட மனிதவள ஒத்துழைப்புடன் அண்மைக் காலங்களில் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புடன் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.