Header

Sri Lanka Army

Defender of the Nation

12th August 2021 08:18:14 Hours

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் பணிக்குழு அதன் தற்போதைய கொவிட் -19 தடுப்புப் வகிபாங்கு தொடர்பாக ஆராய்வு

கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழுவின் மற்றொரு அமர்வு இன்று (11) பிற்பகல் ராஜகிரியாவில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த முன்னேற்றங்களை சுருக்கமாகக் விளக்கினார். பரவல் நிலை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் போன்றவற்றை கூட்டத்திற்கு விளக்கினார்.

பின்னர், கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர், சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் முதியோருக்கு நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயல்முறை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். "இந்த செயல்முறைக்கு அம்யூலன்ஸ் வாகனங்கள் உள்ளடங்களாக 10 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு தாதி, உதவியாளர் மற்றும் தரவு பதிவு இயக்குனர் என முழுமையான பாதுகாப்பு அங்கி தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அம்யூலன்ஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ள வைத்தியர் வாகன தொகுதிற்கான பொறுப்பாளியாக காணப்படுவார். இத்திட்டம் இன்று (12) காலை இராணுவ தலைமையகத்தில் இருந்து இந்த நடமாடும் சேவையை ஆரம்பிப்போம் எனவும் அதேபோல், நாடு முழுவதும் மற்ற தடுப்பூசி திட்டங்களும் முன்னேற்றகரமாக உள்ளன, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் "கடந்த சில நாட்களில் செயலணி தொடர்பிலான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நாட்டில் சகலருக்கும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. நாங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. எனவே அது சுய விருப்பத்தை பொறுத்தாகும். இந்நிலையில் ஒரு நபர் ஏற்கனவே கட்டாயப்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் மூலம் அறிந்துகொண்டோம். இயற்கையாகவே உளவியல் ரீதியாக ஒவ்வொருவரும் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டவர்கள் என்பதால் அவர்களது வெவ்வேறான கருத்துக்களை முன்வைக்கும் உரிமை சகலருக்கும் உள்ளது என குறிப்பிட்டார்.

"15 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மாத்திரைகள் தற்போதும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தாலும் நாங்கள் தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கக்கூடிய நிலையில் உள்ளோம்" என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அதேநேரம் இராணுவத் தளபதி பல வைத்தியசாலை பினவறைகளுக்குள் 130 சடலங்கள் தேங்கி காணப்படுவதாகவும், சில பிரச்சனைகள் பெரியதாக உருவெடுக்கின்ற போது அவற்றுக்கான உடனடி தீர்வுகள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக ஒரு வருடத்திற்கும் மேலாக சில சடலங்கள் பினவறைகளுக்குள் தேங்கி கிடந்ததாகவும். நேற்று, அவை அனைத்தையும் தகனம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். தற்போதும், இராணுவம் அவற்றை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொ்ணடு வருகிறது என்றும் 40 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத சடலங்கள் ஓட்டமாவடிக்கு அடக்கம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுகாதார ஒழுங்குவிதிகள் தடுப்பூசி வழங்கல், சர்வதேச நிலவரம், வைத்தியசாலை வசதிகள் கிடைப்பதிலுள்ள சிக்கல் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.