Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2021 16:57:42 Hours

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம்

இலங்கை இராணுவம் நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை முன்னோக்கி வெற்றிகரமாக கொண்டுச் செல்கிறது. அதற்கமைய சமூகத்தில் முதியவர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை வியாழக்கிழமை (12) இராணுவத்தினால் ஆரம்பிக்கப்படுகின்றது.

அதன்படி ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையின் காணப்படுவதுடன், இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தினை 1906 அல்லது 0112860002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.