Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 19:03:53 Hours

ஓய்வு பெறும் அதிகாரியின் நேர்மையான அணுகுமுறைகளுக்கு தளபதி பாராட்டு

இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவத் தலைமையகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரலாக சேவையாற்றி ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க அவர்களை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது அலுவலகத்திற்கு இன்று (05) அழைப்பித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நான் அறிந்த வகையில் கொவிட் – 19 அச்சுறுத்தல் காலத்திலும் தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு பணியையும் உரிய நேரத்தில் செய்து முடிக்கும் அதிகாரிகளில் நீங்களும் ஒருவர். உரிய நேரத்தில் இராணுவத்திற்கு அவசியமான சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு விடாமுயற்சியுடன் செயற்பட்டீர்கள் என்று கூறிய தளபதி, தளபாடங்களால் தான் கொவிட் - 19 தடுப்பு பொறிமுறையை சரியாக இயக்க முடிந்ததெனவும் தெரிவித்தார். அதேபோல், மேற்படி பொருட்கள் விநியோகத்தின் போது வடக்கு கிழக்கு பகுதிகளிலும் எவ்வித குறைபாடுகளும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த தளபதி உங்களை போன்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் முன்மாதிரியானவை என்றும் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மாரசிங்கவிடம் எடுத்துரைத்தார்.

இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதுடன் இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியின் தரத்தை மேற்படுத்தவும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். அவருடனான சந்திப்பின் போது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். அதேசமயத்தில் கொவிட் - 19 பரவல் உக்கிரமடைந்த காலப்பகுதியில் உபகரண மாஸ்டர் ஜெனரலாக அவர் ஆற்றிய சேவைகளுக்கும் திட்டமிடல்களுக்கும் இராணுவ தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மராசிங்க 1 வது கெமுனு ஹேவா படையணியின் ஒரு போர்வீரராக மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வடமராச்சி நடவடிக்கைகள் மற்றும் யுத்தம் நிறைவடையும் முன்னரான காலப்பகுதிகளில் தாக்குதல்களுக்கும் பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளார்.

அதனையடுத்து தனது கடமைகளை நிறைவேற்றிய காலங்களில் இராணுவ தளபதியிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு ஓய்வு பெறும் அதிகாரி தனது நன்றிகளை தெரிவித்தார். அதேபோல் வழங்கல் அவசியப்படும் நேரத்தை சரியாக அறிந்துகொண்டு வழிநடத்தியமைக்காகவும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்தார். சந்திப்பின் நிறைவில் ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற அதிகாரி மூன்று தசாப்தத்திற்கும் மேலாக இராணுவத்திற்காக ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.