Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2021 16:21:12 Hours

புதிய வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பு

இராணுவ வழங்கல் கட்டளை தளபதியாக நியமனம் பெற்றுள்ள மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் திங்கட்கிழமை (02)கொஸ்கமவிலுள்ள இராணுவ வழங்கல் கட்டளை பிரிவு தலைமையகத்தில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது புதிய தளபதிக்கு நுழைவாயிலில் வைத்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ மரபுகளுக்கு அமைவான கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டன. அதனையடுத்து தளபதியால் படையினருக்கு சிறப்பு மேடையிலிருந்து வணக்கம் செலுத்தப்பட்டதோடு, புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.

மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களின் ஓய்வை தொடர்ந்து மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதியாகவும் சேவையாற்றுவதுடன் இந்த புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்னர் மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரிகளும், அதிகாரிகளும் மற்றும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.