Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2021 17:45:41 Hours

ரோயல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் வெலிகந்தையிலுள்ள குடும்பங்கள் மற்றும் விகாரைகளுக்கு உதவி

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் மக்களின் கஷ்டங்களை போக்கும் நோக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை (1) வெலிகந்தை மற்றும் திம்புலாகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் தூர பிரதேசங்களில்ல விகாரைக்களுக்கு 10 தண்ணீர் தாங்கிகளும் மேற்படி தினத்திலேயே வழங்கி வைக்கப்பட்டன.

233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களினால் முன்மொழியப்பட்ட இத்திட்டம் , கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த ஆகியோரின் வழிகாட்டல்களுக்கமைவாகவும் முன்னெடுக்கப்பட்டது.

நன்கொடைத் திட்டத்திற்கு கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் ரூபா 580,000 பெறுமதியான நிதி உதவி வழங்கப்பட்டிருந்ததோடு. 100 உலர் நிவாரண பொதிகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன. நன்கொடை நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்பாக, திட்டப் பேராசிரியர் சாமரி ஜெயசிங்க, பயனாளிகள் மத்தியிலிருந்த கர்பிணி பெண்களுக்கான ஆலோசணைகளையும் வழங்கினார்.

பேராசிரியர் சமரி ஜயசிங்க, கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாவணர்கள் சார்பில் திரு பிரசாத் லொகுசூரிய, வெலிகந்த பிரதேச செயலாளர், திம்புலாகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் திரு சமிந்த முனசிங்க, தேசமான்ய தேசபந்து யசரத்ன பெரேரா, சந்துணி லொக்குசூரிய, செல்வி சமந்தி விஜேவர்தன, செல்வி சுவரணகாந்தி சமரசிங்க, திரு போஜய கசுன், 233 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 9 வது இலங்கை பீரங்கிப் படைச் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குவிதிதனை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.