Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2021 17:39:34 Hours

கிழக்கு தளபதி பிரிகேட் படைப்பிரிவுகள் & பட்டாலியன்களுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய செவ்வாய்க்கிழமை (29) 23 வது படைப்பிரின் கீழுள்ள 231 மற்றும் 232 வது பிரிகேடுகளுக்கான பரீட்சார்த்த விஜயமொன்றை மேற்கொண்டார்.

முதலில் அவர் தொப்பிகலையில் உள்ள 232வது பிரிகேட் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் பிரதான நுழைவாயிலில் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

குறித்த விஜயத்தின் போது அதன் நிர்வாக செயற்பாடுகள், நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் படையினருக்கான தேவைகள் தொடர்பில் தளபதி கேட்டறிந்துக் கொண்டார்.

232 வது பிரிகேட் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்களுக்கான உரையொன்றினை நிகழ்த்திய தளபதி தொழில் வாழ்க்கையின் போதான சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கத்தை மிக உயர்வாக பேண வேண்டும் என்பதுடன் சேவை வழங்கள் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அத்தோடு கிழக்கு பாதுகாப்பு படையினருக்கான நிர்வாகச் செயற்பாடுகள், நலன்புரி செயற்பாடுகளோடு அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவது தொடர்பிலும் எடுத்துரைத்தார். அத்தோடு நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்ட தளபதி தற்போது வாகன விபத்துக்கள் அதிகளவில் பதிவாகின்றமையினால் போக்குரத்துச் செயற்பாடுகளின் போது அதிக கவனத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுரைத்தார்.

அதனையடுத்து மட்டக்களப்பிலுள்ள 231 வது பிரிகேடுக்கு விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், படையினர் மத்தியில் உரை நிகழ்த்திய தளபதி 4 வது கெமுனு ஹேவா படைப்பிரிவு மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப்படை சிப்பாய்களுக்கும் மேற்குறிப்பிட்ட விடயங்களை எடுத்துரைத்தார்.

மேற்படி விஜயத்தின் போது 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, படையணிகளின் கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.