Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2021 18:09:33 Hours

எயார் மொபைல் பிரிகேடின் எதிர்கால திட்டமிடல் ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு

இராணுவத் தலைமையகத்திற்கான ஜனாதிபதியின் விஜயத்தின் மற்றுமொரு அங்கமாக இராணுவ தலைமையகத்தின் பலதரப்பட்ட பாகங்களின் செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாக ஆவணப்படுத்தப்பட்ட “எயார் மொபைல் பிரிகேடின் வியக்கத்தக்க எதிர்காலம்” என்ற பெயரில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் 2021-2026 வரையான காலப்பகுதியில் எயார் மொபைல் பிரிகேடின் சிறந்த பலன்களை பெறுவதற்கான மூலோபாய அணுகுமுறைகள் பற்றி குறிப்பிடுவதாக மேற்படி நூல் காணப்படுகிறது.

அத்தோடு மேற்படி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட 1994 ஆம் தொடக்கம் அதன் செயற்பாடுகள் மற்றும் இராணுவத்தின் 2020 – 2025 வரையான முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடலின் அடிப்படையில் இது காணப்படுவதுடன் 53 வது பிரிவு எயார் மொபைல் பிரிகேடின் கொள்கையினூடாக விசேட நடவடிக்கை படையணி மற்றும் காலாட் படைகளுக்கு இடையில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்யவுள்ளது.

53 வது படைப்பரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களினால் அப்படைப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் எயார் மொபைல் பிரிகேட்டின் செயற்பாடுகள் இராணுவத் தளபதியின் 2020 -2025 முன்னோக்கி மூலோபாய நகர்விற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மேற்படி புத்தகத்தின் சுருக்க விளக்கமானது வழங்கப்பட்டது. பத்து மாதங்களுக்கும் மேலாக சிவில் - இராணுவ பிரதிநிதிகளால் நன்கு ஆராயப்பட்டு இராணுவத்தின் எதிர்கால உத்திகள், பாதுகாப்பு நிலை மாற்றங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள், நவீனமயமாக்கல் மற்றும் தரநிலைகளை மேம்படுத்துதல், மாற்றத்திற்கு வழிவகுத்தல் தேவை நடைமுறைச் செயற்பாடுகள், உலகளாவிய அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளில் எயார் மொபைல் பிரிகேடின் அவசியத்தையும் இந் நூல் வலியுறுத்துகிறது.

“வியப்பூட்டும் எயார் மொபைல் பிரிகேடின் எதிர்காலம்” 2021-2026 நூலின் முன்னுரை தொடர்பிலான விளக்கத்தை தொடர்ந்து அதன் முதல் பிரதி பிரதம விருந்தினரான அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலாளர் டொக்டர் பீ.பீ.ஜயசுந்தர, ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய இராணுவத் தலைமையைகத்திற்கு முதல் முறையாக விஜயம் மேற்கொண்டமைக்காக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதனையடுத்து நிகழ்வின் நிறைவம்சமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

எயார் மொபைல் பிரிகேடானது 1 மே 1994 அன்று வவுனியாவில் அதன் ஸ்தாபக தந்தையான பிரிகேடியர் எச்.என் ஹலன்கொட அவர்களினால் அவசர நிலைமைகளை மட்டுப்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. மேற்படி பிரிவின் விமான குழு போர்க்களத்தில் துணிச்சலான செயற்பாடுகளுக்கு பெயர் பெற்று விளங்கியதோடு, ரிவிரெச – 1995 மற்றும் ஜயசிக்குறு - 1997 , கினிஹிர – 2000 , அக்னிகீலா 2001 மற்றும் 2006 - 2009 இடைப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் என்பவற்றிலும் புகழ்பெற்றதாக காணப்பட்டது. தற்போது, எயார் மொபைல் படையணி ஐந்து பட்டாலியன் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 5 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது கஜபா படையணி மற்றும் 1 வது விஜயபாகு காலாட் படையணி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.