Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2021 23:00:01 Hours

கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர் மற்றும் ஏனைய தரப்பினர் கொவிட் – 19 நிலவரம் தொடர்பில் மீளாய்வு

கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் மற்றொரு பணிக்குழு அமர்வு இன்று (29) பிற்பகல் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் ராஜகிரியவில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தொற்றுநோய் நிலைமை என்பன தொடர்பிலும் நாட்டின் தனிமைப்படுத்தல் பகுதிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

மேலும் தடுப்பூசி செயன்முறை தொடர்பிலும் விளக்கமளித்ததோடு 60 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் முதல் மாத்திரையினை பெற்றுக் கொண்டுள்ளதோடு மாத்தளை, குருணாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 90 சதவீதமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வெளிநாட்டிலிருப்பவர்களை அழைத்து வரும் பணிகள் தொடரும் என்றும், அதேபோல் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்வோருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் தடுப்பூசியின் ஒரு தொகுதியை கூட பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகளவில் உயிரிழந்திருப்பதாகவும் கொழும்பு மாவட்டத் தடுப்பூசி ஏற்றத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதோடு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் செயன்முறை பற்றியும் விளக்கமளித்தார்.

அதனையடுத்து சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைரஸ் பரவல் நிலைமையின் அடுத்த கட்டம் தொடர்பில் எடுத்துரைத்ததோடு அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

அதேவேளை ஏனைய தரப்பினரால் பொது நடைமுறைகள், இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், சுகாதார ஒழுங்குவிதிகள், சுகாதார துறையினரின் தயார் நிலை, அத்தியாவசிய சேவைகள் , ஒட்சிசன் ஏற்பாடுகள், சுகாதார ஊழியர்களின் செயற்பாடுகள், வெளிநாட்டிலிருப்போரின் வருகை, தடுப்பூசியின் மாத்திரையினை பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆம் மாத்திரை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.