Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2021 11:25:39 Hours

கிளிநொச்சியில் தேவையுடைய குடும்பங்களுக்கான மேலும் மூன்று புதிய வீடுகள் இராணுவத்தால் பயனாளிகளுக்கு

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் படி, தேவையுடைய பொதுமக்களுக்கான வீடு கட்டுமானத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகம் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் என்ற நோக்கத்துடன் தகுதியான பயனாளிகளுக்கு மேலும் மூன்று வீடுகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க வழங்கிய வழிகாட்டுதலுடனும் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்துடனும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட்படை மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கூட்டு முயற்சியில் கிளிநொச்சி காசிகுடா, பூநகரி திரு சின்னவி நவரத்னத்தின் குடும்பத்திற்கான புதிய வீடு கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க வெள்ளிக்கிழமை (16) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு வீட்டினை வழங்கினார். மூலப்பொருட்களுக்கான நிதி பிலியந்தலையை சேர்ந்த திரு பிரபாத் வீரகம அவர்களால் வழங்கப்பட்டது. இதற்கான ஒருங்கிணைப்பினை 5 (தொ) இயந்திரவியல் கலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ERA சில்வா மேற்கொண்டிருந்தார்.

5 (தொ) இயந்திரவியல் காலாட் படை படையினர் புதிய வீட்டை நிர்மாணிக்க தங்கள் மனிதவளத்தையும் தொழில்நுட்ப திறன்களையும் பங்களித்தனர். இந்து மத சடங்குகளுக்கு மத்தியில், பிரதம விருந்தினர் ஒரு நாடாவை வெட்டி பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு புதிய வீடு திறந்துவைக்கப்பட்டது. 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க மற்றும் 663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாஷான் லியனகம, 5வது (தொ) இயந்திர காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஈ.ஆர்.ஏ.சில்வா ஆகியோர் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

கூடுதலாக, 5 (தொ) இயந்திரவியல் காலாட் படையினர் வீடு கையளிக்கும் விழாவில் வீட்டு தளபாடங்கள், உபகரணங்கள், உலர் உணவு பொதிகள், காய்கறிகள் மற்றும் எழுது கருவி பொதிகளை பரிசளித்தனர்.

அதே வேளையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அறிவுறுத்தலின் பேரில் 24 வது விஜயபாகு காலாட் படை (வி.ஐ.ஆர்) கிளிநொச்சி மதுவில்நாடு ஏழைக் குடும்பத்திற்காக கொழும்பின் லசந்த அவர்களின் நிதியுதவியில் கட்டப்பட்ட மற்றொரு புதிய வீடு வெள்ளிக்கிழமை (16) ஒரு எளிய விழாவுடன் பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளததை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட சமூகத் திட்டம் 24 விஜயபாகு காலாட் படை கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எச். எஸ் குமாரசிங் அவர்களின் மேற்பார்வையில் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

அவர்களின் கட்டுமான நிபுணத்துவத்திற்கு மேலதிகமாக பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் இருந்த கிளிநொச்சி மடுவில்நாடு திரு. ராமநாதன் மணிவத்தன் அவர்களுக்கு அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிசளிக்கப்பட்டன.

இந்து மரபுகளுக்கு இணங்க நடைப்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் பூநகரி பிரதேச செயலாளர், 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 663 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் சுபாஷன் லியனகம, பூநகரின் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றில் இந்து பாரம்பரியத்தின் எளிய மத சடங்குகளுடன் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு நாடா வெட்டி பயனாளியிடம் வீடு கையளிக்கப்பட்டது.

இதேபோல், திரு கோகுலன் அவர்களின் நிதியுதவியில் பிலிமந்தநாறு மைல்வானபுரம் திரு. ஆறுமுகம் நகுலேஷ்வரன் அவர்களுக்கு 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் கட்டப்பட்ட வீடு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு ஏழை மக்களின் நல்லெண்ணம் , நல்லிணக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராணுவத் தளபதியினால் வடிவமைக்கப்பட்ட திட்டத்தில் இன்று வரை (22) முன்மொழியப்பட்ட 11 வீடுகளில் ஒன்பது வீடுகளின் கட்டுமானத்தை நிறைவு செய்துள்ளது. அவற்றில் இன்னும் இரண்டு வீடுகளின் கட்டுமாணப்பணிகள் செயல்பாட்டில் உள்ளன.

மேலும், படையினர் தேவையான வீட்டு உபகரணங்கள், உலர் உணவு பொதிகள், காய்கறிகள் மற்றும் பிள்ளைகளுக்கு தேவையான எழுதுபொருள் பொதிகள் என்பன பரிசளிக்கப்பட்டன. 14 இலங்கை தேசிய பாதுகாவல் படையின் (எஸ்.எல்.என்.ஜி) கட்டளை அதிகாரி மேஜர் சாமிந்த வன்னியராச்சியின் மேற்பார்வையில் இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இந்த மூன்று புதிய வீடுகளையும் திறந்து வைத்தபின், ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்கள், வீட்டுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்கிய படையினருக்கும் வீடு கட்டும் திட்டங்களில் மிகுந்த அக்கறை காட்டியதற்கும் கிளிநெச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க பாராட்டினார்.இங்கு சில சந்தர்பங்களில் தங்களது சொந்த பணத்தையும் படையினர் பங்களித்மையை நினைவுப்படுத்தினார். அந்த வீடற்ற பொதுமக்களின் சிறந்த நலனுக்காக. அந்த குடும்பங்களில் பலர் தங்கள் மகள்மார், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் குடிசைகளில் அல்லது தகரம் கொட்டில்களில் வசித்து வந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது.

நன்கொடையாளர்கள், 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாஷான் லியனகம, பூநகரின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரபெரும, தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், கண்டாவாலி மற்றும் மைல்வானபுரம் கிராம சேவையாளர்கள் ஆகியோர் இத்திறப்பு விழாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பங்குப்பற்றினர்.