Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2021 22:25:53 Hours

ரோயல் கல்லூரி தமிழ் வகுப்பு – 1980 கந்தவலை வறிய குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்குகிறது

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் கீழுள்ள 572 வது பிரிகேட் சிப்பாய்கள் – கிளிநொச்சி, கந்தவலை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வறிய குடும்பங்களுக்கு 177 நிவாரண பொதிகளை வெள்ளிக்கிழமை (2) விநியோகித்தனர்.

மேற்படி மனிதாபிமான திட்டத்திற்கான நிதியுதவி கொழும்பு ரோயல் கல்லூரியில் 1980 ஆண்டில் காணப்பட்ட தமிழ் உயர்தர வகுப்பினரால் வழங்கப்பட்டதுடன், அவர்களால் உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக 57 வது படைப்பிரிவின் 572 வது பிரிகேட் தலைமையகத்திற்கு ரூ .474,000 ரூபாய் பெறுதியான நன்கொடை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு பொதியிலும் 2500 ரூபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கியிருந்தன. அவற்றில், அரிசி, பருப்பு, பால் மா, மசாலா, தானியங்கள், டின் மீன் போன்ற பொருட்கள் உள்ளடங்கியிருந்தன.

அமெரிக்காவில் வசிக்கும் சிரேஸ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம், ரோயல் கல்லூரியில் 1980 உயர்தர தமிழ் வகுப்பு சார்பாக இந்த திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

572 வது பிரிகேடின் தளபதி மற்றும் 6 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினரின் ஒருங்கிணைப்பில் அவ்பிரிகேடின் சிவில் விவகார அதிகாரியின் ஒத்துழைப்பின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கந்தவலை பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட மிகவும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு அப்பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க , 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 572வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி , 57 வது படைப்பிரிவின் படைத் தளபதி, 572 வது பிரிகேட் தளபதி, கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கந்தவலை பிரதேச செயலாளர், 572 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி , 6 வது சிங்கப்படையணி கட்டளை அதிகாரி மற்றும் 14 வது இலங்கை பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகிய்யோரின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.