Header

Sri Lanka Army

Defender of the Nation

14th July 2021 11:00:45 Hours

விகார மகா தேவி பூங்காவின் திறந்த அரங்கில் வியாழக்கிழமை (15) முதல் இராணுவத்தின் தடுப்பூசி செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில்

மேல் மாணாகத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் தொகுதியை பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டத்தை விகாரா மகா தேவி பூங்காவின் திறந்த அரங்கில் வியாழக்கிழமை (15 ஜூலை 2021) முதல் முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இராணுவ மருத்துவ குழுக்களினால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை (15) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேற்படி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்திற்குள் வசிப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அடையாள அட்டை, மின் கட்டண அறிக்கை அல்லது தொலைபேசி கட்டண அறிக்கை, வாக்காளர் பதிவு அட்டை , கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம வதிவிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்றுடன் விகார மகா தேவி பூங்காவி்ன் திறந்த அரங்கில் முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி செயற்றிட்டத்தில் கலந்துகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒரு மாதத்திற்கு முன்னதாக இராணுவத்தின் மருத்துவ குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெஹெரஹரவிலுள்ள 1 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் தலைமையத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதுடன், பத்தரமுல்லை ‘தியத உயன’ வில் வியாழக்கிழமை (15) நிறுவப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் திங்கட்கிழமை (19 ஜூலை) காலை 8.30 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு புதன்கிழமை (21) வரையில் முன்னெடுக்கப்படும். (முடிவு)