Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2021 23:30:29 Hours

கொக்குவில் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மலர் அஞ்சலி

வடக்கு மற்றும் தெற்கிற்கு இடைப்பட்ட தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கான கொக்குவில் இடமாறல் கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது போரில் சிக்கி உயிர்நீத்த கொக்குவில் போர் வீரர்களை நினைவுகூறும் விதமாக, உயிர்த் தியாகம் செய்த 6 வது இலங்கை சிங்கப்படையணியின் மறைந்த முன்னாள் கெப்டன் சாலிய உபுல்தெனிய தலைமையில் மற்றும் 58 வீரர்கள் மற்றும் , சிவில் ஊழியர் குழுவினர் ஆகியோரின் உயிர் தியாகத்தின் 31 வது நினைவுகூறுல் தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவுத்தூபியில் (11 ஜூலை 2021) அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொக்குவில் தொடர்பாடல் கோபுரத்தின் அதிகாரி கட்டளையாகவிருந்த 3 வது சிங்கப் படையணியின் கெப்டன் எஸ்.யூ.அலதெனிய அவர்களின் மரணத்தின் பின்னர் அவருக்கு பரம வீர விபூசணய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1990 களில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு பயங்கரவாதிகளால் மேற்படி கைப்பற்றப்பட்ட போது அவர் உயிர்நீத்திருந்திருந்துடன் அவர் ஏனைய சிப்பாய்களுடன் இணைந்து தனது இறுதி மூச்சு வரையிலும் எதிரிகளுடன் கடுமையாக போராடி 1990 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி உயிர்நீத்தார். குறித்த போர் கொக்குவில் பகுதியில் ஜூன் 27 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு ஜூலை 11 வரை நடைபெற்றிருந்துடன் 14 நாட்களாக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் இராணுவத்தினரை முற்றுகையிட்டிருந்தனர்.

மேற்படி நினைவுகூறல் நிகழ்வு 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மதுரப்பெரும ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய 6 வது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரங்க முஹாந்திரம் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, நினைவுத் தூபிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஔியை அனைத்து நினைவுத் தூபியின் பாதங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க, 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.