Header

Sri Lanka Army

Defender of the Nation

09th July 2021 20:53:10 Hours

51 வது படைப்பிரிவினரால் டெங்கு பரவக்கூடிய இடங்களில் சிரமதானம்

51 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 511,513 மற்றும் 515 வது பிரிகேட் படையினர் சனிக்கிழமை (3) யாழ். தீபகற்பத்திலுள்ள டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய அபாயம் காணப்படுகின்ற பகுதிகள் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

மேற்படி சிரமதான பணிகள் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டதுடன், புனித ஜோன் பப்டிஸ்ட்தேவாலய வளாகம்,பெரியவிளான் புனித அந்தோனியர் தேவாலய வளாகம், கந்தரோடை அருள்மிகு அருளானந்தன் பிள்ளையார் ஆலய வளாகம், அளவெட்டி பிள்ளையார் கோவில் வளாகம், மற்றும் காரைநகர் சிவன் கோவில் வளாகம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி முழுநாள் சிரமதான பணிகள் 511 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் பெர்ணான்டோ, 513வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் முகமது பாரிஸ், 515 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பாலித கோடெல்லவத்த ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டன.

10 வது இலங்கை பீரங்கி படையணி, 11வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 9 வது இலங்கை இசோயுத காலாட்படையணி மற்றும் 16 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் படையினர் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.