Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2021 15:17:16 Hours

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் படையினரால் முன்னெடுப்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்திற்கான மிகப் பெரிய பங்களிப்பாக அமைந்துள்ள நிலையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாண ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டம் இன்று (12) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குடல் மற்றும் நுரையீரல், சுவாசத் தொகுதியை பாதிக்கூடிய வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமை (12) பிற்பகல் வேளைக்குள் ஆயிரக்கணக்கான ஆசியர்களுக்கு வழக்கப்பட்டது.

கௌரவ கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரால் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் மேற்பார்வை செய்யப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் கல்விச் சமூகத்துக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வலயக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய பயிற்சியாளர்கள், கல்வி நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் பாடசாலைகளுக்கான பாடத்திட்ட வல்லுனர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் மஹரகமவிலுள்ள தேசிய கல்வி நிறுவகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆலோசணைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியிர் கே.கபில பெரேரா ஆகியோரும் கல்வி அமைச்சருடன் இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் போது, மேல் மாகாணத்தின் கொழும்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.