Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2021 18:08:27 Hours

கிளிநொச்சி தளபதி அனைத்து நிலையினருடனும் சுமூக சந்திப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 573 வது பிரிகேட் மற்றும் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளுக்கான விஜயமொன்றினை 05 ஜூலை 2021 அன்று மேற்கொண்டிருந்தார்.

பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வருகையின் போது 573 வது பிரிகேட் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதுடன், 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும அவர்களினால் பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைக்குமாறு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து படையினர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய அவர் 9 வது விஜயபாகு காலாட்படையணிக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது அவருக்கு பிரிகேட் மற்றும் பட்டாலியன்களின் பணிகள் தொடர்பாக பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது படையினர் மத்தியில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அனைத்து அதிகாரிகளும் ஏனைய அணிகளும் கொவிட் -19 தொற்றுநோய் பரவலை மட்டுப்படுத்தவுவதற்கான தேசியப் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றமைக்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள படையினர் மத்தியில் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தொழில் வாழ்க்கையின் போது பல்வேறு தொழில்முறை பயிற்சியின் முக்கியத்துவத்தையும், எல்லா நேரங்களிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இறுதியாக, பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

57 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 22 வது படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட சகலரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தளபதியின் வருகை நிகழ்வில் பங்குபற்றினர்.