Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2021 02:20:59 Hours

குறுகிய காலத்தில் இராணுவ தலைமையகத்தில் பரந்த சேவையாற்றிய சேவை வனிதையர் பிரிவு 37 வது ஆண்டு பூர்த்தி விழாவை கொண்டாடுகிறது

இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவானது போரில் உயிர் நீத்த/ காணாமல் போன மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான உந்து சக்தியாக இருந்து வருவதோடு அவர்களது உறவினர்கள், தற்போது சேவையிலிருக்கும் இராணுவ நல்வாழ்வையும் நலனையும் கவனிக்கும் மற்றுமொரு ஒரு இணை சக்தியாகவும் செயற்பட்டு வருகின்ற நிலையில் இராணுவத்தின் போர் வீரர்களுக்காக சேவையாற்றும் சிரேஸ்ட அதிகாரிகளின் துணைவர்களால் நடத்தப்படும் நலன்புரி அமைப்பான சேவை வனிதையர் அமைப்புக்கு (ஜூலை 12) திங்களன்று 37 வயதாகிறது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஜூலை 12, 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்ட 37 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட மேற்படி அமைப்பின் 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சேவை வனிதையர் படையணி, இன்றுவரை பணியாற்றி வருகிறது. அனைத்து இராணுவத்தினரின் குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் போரில் உயிர் நீத்த வீழ்ந்த மற்றும் காயமடைந்த தேசபற்று கொண்ட போர் வீர வீராங்கனைகளின் "இரண்டாவது தாய்" என்ற பாத்திரமாக விளங்கும் சேவை வனிதையர் அமைப்பு அவர்களுக்கான வீட்டுவசதி, குழந்தைகளுக்கு உதவித்தொகை, ஊன்றுகோல், செயற்கை கால்கள் வழங்குவதன் மூலம் இராணுவத்திற்கு பலம் தரும் தூணாக நிற்கிறது. போர் நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களுக்கு சக்கர நாற்காலிகள், போர்வீரர்களின் குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான முன் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நடத்துதல், வீடுக ளைநிர்மாணிக்க அவசியமான நிதி உதவி, வைத்திய

பராமரிப்பு நிலையங்கள், இயற்கை பேரழிவுகளின் போது கைக்கொடுத்தல் மற்றும் தைரியமூட்டல் காயமடைந்த போர்வீரர்களை அடிப்படை தேவைகள், மற்றும் நல்வாழ்வுக்கான ஆன்மீக திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் கைகொடுத்து வருகிறது.

திங்கட்கிழமை (12) சுகாதார சிக்கல்கள் காரணமாக குறைந்த அளவிலானவர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 37 வது ஆண்டு நினைவு தினம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இராணுவ தலைமையத்தின் சேவை வனிதையர் பிரிவில் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஆண்டு பூர்த்தி நிகழ்வின் போது இராணுவ சேவை வனிதையர் பிரிவு பல வருட காலங்களாக முன்னெடுத்து வரும் சேவைகள் தொடர்பாக தகவல் தொகுப்புகள் அடங்கிய “மெஹெவரக அசிரிய” (செயற்றிட்டம் ஒன்றின் அறுவடை) சஞ்சிகையும் வெளியிடப்படவுள்ளது. மேற்படி சஞ்சிகையின் முதல் பதிப்பு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் நிகழ்வின் பிரதம விருந்தினராக பங்கேற்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது. அத்தோடு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தொடர்ச்சியான நலன்புரி சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில் சேவை வனிதையர் படையணியினரின் குடும்பங்களை சேர்ந்த 10 மாணவர்களுக்கு பிரதம விருந்தினரின் கரங்களினால் மடிக் கணினிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதுடன், சுகாதார காரணங்களினால் ஒரு மாணவருக்கு மாத்திரம் அடையாள அம்சமாக மடிக்கணினி வழங்கி வைக்கப்பட உள்ளது.

அதேநேரம் ஆண்டு பூர்த்தி நிகழ்வின் மற்றுமொரு அம்சமாக சகல படையணி சேவை வனிதையர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் முல்லேரியா மனநல வைத்தியசாலையில் 5 மற்றும் 6 வது வார்டுகளில் சிகிச்சை பெரும் 150 நோயாளிகளுக்கு இன்று (12) சிறப்பு மதிய உணவு விருந்துபசாரம் ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

மேற்படி அமைப்பின் அண்மைய திட்டங்களில் ஒன்றான 1000 கட்டில்கள் கொண்ட கொவிட் - 19 நோயாளிகளை பராமரிப்பதற்காக சீதுவையில் நிறுவப்பட்ட இடைநிலை சிகிச்சை மையத்தின் செயற்பாடுகள் 10 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பெரும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் (1984-1985) முதல் தலைவியாக திருமதி சோனியா வீரதுங்க பதவி வகித்தார். மேலும் முப்பத்தேழு ஆண்டுகள் 15 பேர் இந்த மதிப்புமிக்க அமைப்பின் வளர்ச்சிக்கு வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சேவை வனிதையர் பிரிவு இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சுவரொட்டி பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம் நிதி திரட்டுகிறது. புத்தாண்டு கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்கிறது. அவற்றை கொண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் மற்றும் ஆடைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நிறுவனத்திற்கும் வருமானத்தை ஈட்டித் தருகிறது. அதன் நலன்புரி நடவடிக்கைகளை பாராட்டும் வகையில் நூற்றுக்கணக்கான நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை வழங்கியுள்ளதுடன், போரில் உயிர் நீத்த மற்றும் காயமடைந்த வீரர்களின் அர்ப்பணிக்காகவும் பெருமளவில் அன்பளிப்புக்களை வழங்கியுள்ளனர்.

இராணுவ தலைமையகத்தின் சேவை வனிதையர் பிரிவினால் மெனிங் டவுன், கெந்தலந்த ஆகிய பகுதிகளில் வியாபார நிலையத் தொகுதிகள் நடத்திச் செல்லப்படுவதோடு, பல சரக்கு பொருட்கள் மற்றும் ஏனைய வீட்டுப் பொருட்கள் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படுகிறது. அத்தோடு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட பேக்கரி உற்பத்தி பிரிவுகளின் தயாரிப்புக்களும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சேவைகளுக்கு மேலதிகமாக, இராணுவ சேவா வனிதா பிரிவு சுய வேலைவாய்ப்புக்கான கற்கை நெறிகள் மற்றும் போர்வீரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு தையல் இயந்திரங்களை நன்கொடை செய்தல் மற்றும் போர்வீரர்களின் குழந்தைகளுக்கான கணினி படிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது. இராணுவ சேவா வனிதா பிரிவு காயமடைந்த போர்வீரர்களின் வீடுகளில் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு வசதிகளுடன் பல கழிப்பறைகளை கட்டியிருந்தது.

இராணுவ சேவா வனிதா பிரிவின் அரசியலமைப்பு, அமைப்பின் உறுப்பினர் இராணுவ அதிகாரிகள் மற்றும் லேடி அதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். செயற்குழு ஜனாதிபதி, துணைத் தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் நிர்வாகக் குழுவை ஆதரிக்கிறது.

1984 ஆம் ஆண்டிலிருந்து திருமதி திலானி வீரசூரிய, திருமதி சோனியா வீரதுங்க, திருமதி மாலா செனவிரத்ன, திரிமதி ஐரா வீரசிங்க, திருமதி திலகா வைத்தியரத்ன, திருமதி லலிதா டி சில்வா, திருமதி ஜயந்தி தலுவத்த, திருமது கனனா பலகல்ல, திருமதி சோனியா கோட்டேகொட, திருமதி அனோமா பொன்சேகா, திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய, திருமதி தமயந்தி ரத்நாயக்க, திருமதி நயனா டி சில்வா மற்றும் சந்திரிகா சேனாநாயக்க ஆகியோர் வரிசையில் 2019 ஆம் ஆண்டில் திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக நியமிக்கப்பட்டார்.