Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2021 06:32:29 Hours

மறைந்த ஒலிம்பிக் வீரர் கோப்ரல் கருணானந்தவின் குடும்பத்தாரிடம் தொலைபேசி மூலம் இராணுவ தளபதி நலம் விசாரிப்பு

1964 ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் தூரத்தை ஓடி பூர்த்திசெய்தமைக்காக உலகின் கவனத்தை ஈர்த்த உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரரும் நெடுந்தூர ஓட்ட வீரருமான மறைந்த கோப்ரல் ரணதுங்க கருணானந்த அவர்களின் குடும்பத்தின் வீட்டிற்கு ஒரு குழுவினரை அனுப்பிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு நலம் விசாரித்தார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை இராணுவத்தின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் பிரிகேடியர் நளீன் பண்டாரநாயக்க உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் குழுவினர் அண்மையில் நாத்தான்டியவில் வசிக்கும் ஒலிம்பிக் ஓட்ட வீரரின் வீட்டிற்கு சென்று உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரரும் நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரருமான மறைந்த கோப்ரல் ரணதுங்க கருணானந்த அவர்களின் குடும்பத்தாருடன் சுமூகமாக கலந்துரையாடியிருந்ததுடன், அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் பெற்றுத்தந்த கௌரவம் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது என்றும் சுட்டிக்காட்டினர்.

மேற்படி குழுவினர் மறைந்த வீட்டிற்கு வருகை தந்ததவுடன் மறைந்த வீரரின் பிள்ளைகளுக்கு தொலைபேசிகளுக்கு அழைப்புக்களை மேற்கொண்ட இராணுவ தளபதி அவர்களிடம் நலம் விசாரித்தார். அதேபோல் மறைந்த கோப்ரல் ரணதுங்க கருணானந்த அவர்களின் பாரியாரின் ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தளபதி, அவர்களின் எதிர்கால மேம்பாட்டிற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, மறைந்த கோப்ரல் ரணதுங்க கருணானந்த அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்த குழுவினரால் அவர்களுக்கான உதவித் தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.

மறைந்த கோப்ரல் கருணானந்தவின் ஒலிம்பிக் கதை ஜப்பானிய பள்ளி பாடப்புத்தகங்களில் 'இல 67', Bottom Ranked Hero’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜப்பானில் "வெற்றியை விடவும் பங்குபற்றலே முக்கியமானது" என புராணக் கதை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனவே நான் இங்கு வந்தேன். நான் 10,000 மீட்டரில் பங்கேற்று எனது சுற்றுகளை நிறைவு செய்தேன். என கருணானந்த கூறியிருந்தமையானது அங்கு கூடியிருந்த 60,000 பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்திருந்ததுடன் அவர்கள் அனைவரும் எந்து நின்று தங்களது ஆரவாரம் மற்றும் கரகோசங்களை எழுப்பி மகிழ்சியினை வெளிப்படுத்தினர். அப்போது 10,000 மீட்டர் ஓடி தங்கப் பதக்கம் வென்ற மில்ஸ் அவர்கள் , கருணானந்த தான் போட்டியின் உண்மையான வெற்றியாளர் என்று கூறினார்.

மறைந்த கோப்ரல் கருணானந்த 1964 ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள உலகில் 'மிகவும் உற்சாகமாக தோல்வியுற்றவர்' என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் போட்டியில் இறுதி இடத்தை பெற்றுக்கொண்டிருந்தாலும் 1964 ஆம் ஆண்டு இலங்கை ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கி சுடும் வீரர்களான ரவி ஜயவர்தன மற்றும் எம்.ஆர். பெரேரா, குத்துச்சண்டை வீரர்களான மெல்கம் புல்னர் மற்றும் வின்ஸ்டண் வான் க்ளீன்பேர்க் மற்றும் மல்யுத்த வீரர் எர்னஸ்ட் பெர்னாண்டோ ஆகியோர் மட்டும் இடம்பெற்றிருந்ததன் காரணமாக மில்லியன் கணக்கான ஜப்பானிய பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். ஒக்டோபர் 14, 1964 அன்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 10,000 மீட்டர் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 29 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதோடு அதில் கருணானந்த ஓட்ட வீரராக பங்குபற்றி 60,000 பார்வையாளர்களின் ஆரவாரம் மற்றும் கரகோசங்களுக்கு மத்தியில் ஓடி முடித்தார்.

கருணானந்த பங்குபற்றிய 10,000 மீட்டர் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஐக்கிய அமேரிக்காவைச் சேர்ந்த பில்லி மில்ஸ் போட்டியை நிறைவு செய்த வேளையில் கருணானந்த நான்கு சுற்றுக்களைகூட ஓடி நிறைவு செய்திருக்கவில்லை என்பதோடு, இறுதி வரையில் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்த அவர் பார்வையாளர்களை வியப்புக்கு உள்ளாக்கியிருந்தாலும் அவருடைய நம்பிக்கைக்கு முன்பாக பார்வையாளர்களை அமைதிகாக்க செய்திருந்தார். இறுதியில் கருணானந்த அனைத்து பார்வையாளர்களினதும் கௌரவத்துக்கும் ஆளாகும் வகையில் போட்டியை நிறைவு செய்தார்.

1975 ஆம் ஆண்டில் ஜப்பானின் அழைப்பையேற்று தனது குடும்பத்தாருடன் ஜப்பானுக்கு செல்லவிருந்த கோப்ரல் கருணானந்த அதற்கு சில தினங்களுக்கு முன்பு நாமல் நதியில் மூல்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.

மறைந்த கோப்ரல் கருணானந்த அவர்களின் வீட்டிற்கு செல்வதற்காக பனாகொட விளையாட்டு மேம்பாட்டு தளத்தின் தளபதி பிரிகேடியர் பிரிந்த நவரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.