Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2021 06:00:48 Hours

இராணுவ கண்டுபிடிப்பான கை தொற்று நீக்கி இயந்திரம் ஜனாதிபதிக்கு அறிமுகம்

இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கை தொற்று நீக்கி இயந்திரம் செவ்வாய்க்கிழமை 06 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்டுப்பிடிப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஆராய்ச்சி மற்றும் திட்ட மேம்பாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் சுதத் உதயசேன ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமேதகு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.பி. எகொடவெல அவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்த இலங்கை இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட கை தொற்று நீக்கும் இயந்திரம் நான்கு லிட்டர் கிருமிநாசினி திரவ கொள்ளளவில் 600 பேரின் கைகளை தொற்று நீக்கம் செய்யும் திறன் கொண்டது. இது சார்ஜ் செய்து குறைந்த வலுவில் 48 மணி நேரம் தனாக இயங்கக்கூடியது.

உள்ளூர் அல்லது வெளிநாட்டு சந்தைக்கு பாரிய அளவில் இயந்திரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வமுள்ளவர்களுடன் தங்கள் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள இராணுவம் தயாராக உள்ளது.