Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2021 10:34:48 Hours

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு இராணுவத்தினரின் பங்களிப்பை இழிவுபடுத்தக் கூடாது - கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு உறுப்பினர்களுடன் இன்று மாலை (7) இடம் பெற்ற சந்திப்பின் போது பணிக்குழுவின் அனைத்து முடிவுகளும் பெரும்பாலும் மக்களின் நலன்களுக்காக எடுக்கப்படுகின்றன எனவும் மேலும் தனிப்பட்ட சிலரின் கருத்துக்களை பெரிதுப்படுத்தக் கூடாது என குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்

இன்று பிற்பகல் ஜனாதிபதி பணிக்குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தும் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ப தற்போது நிலைமை, தற்போதுள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகள், பொது இடங்களில் பொதுமக்களின் நடத்தை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புதிய வைரஸ் மாறுபாடுகளைக் கண்டறிதல், புதிய வழிகாட்டுதல்கள் வெளிநாட்டு வருகை, தற்போதைய தடுப்பூசி செயல்முறை, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை நிர்வகிக்கும் தடுப்பூசி சமூக நிலையங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டு அம்சங்கள் போன்றவையும் ஆராயப்பட்டன.

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகள் இருந்தப் போதிலும் முப்படைகளின் வைத்திய நிபுணர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள், வைத்திய ஆலோசகர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய உதவிப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழில் தகுதி வாய்ந்த வைத்தியக் குழுக்களின் சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு தடுப்பூசி ஏற்றும் செயற்முறைகள் மேன்மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி வழியுறுத்தினார்.

"ஒருவரது அர்ப்பணிப்பு சேவைகளை குறைத்து மதிப்பிடவோ, கேலி செய்யவோ கூடாது, ஆதாரமற்ற ஊடக அறிக்கைகள் மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துக்கள். தடுப்பூசியை ஒரு தேசிய முயற்சியாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம், அவ்வாறு செய்வதற்கு அறிவுறுத்தப்படும் வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவோம். முப்படை வைத்திய அதிகாரிகள் சிவில் துறையில் உள்ள மற்றய வைத்தியர்கள் போலவே தொழிலிலும் தகுதியிலும் சமமான தகுதி உள்ளவர்கள் ஆவர். இராணுவ வைத்திய அதிகாரிகள் தேசத்தின் சார்பாக இந்த பணியை செய்ய தகுதியற்றவர்கள் அல்லது தரமற்றவர்கள் என்று அர்த்தமல்ல. எங்கள் தடுப்பூசி வழங்கும் ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான பாராட்டுகளும் உள்ளன. ஏற்பாடுகள் மற்றும் நாங்கள் இந்த சேவைகளை நிபுணர்களின் தொகுப்பாக செய்கிறோம், என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதியாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கன் பற்றி குறிப்பிடுகையில், ஆன்டிஜென் சோதனைகளுக்குப் பதிலாக, அங்கு பி.சி.ஆர் சோதனைகளைச் செய்து உரிய ஆவணங்களுடன் இங்கு திரும்புமாறு ஊக்குவிக்கிறோம். அறிவிக்கப்பட்டபடி மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கடல் பயணங்கள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டுதல்களையும் விளக்கினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புள்ளிவிவரங்களுடன் உலகளாவிய மற்றும் உள்ளூர் நிலை குறித்து கருத்து தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து வயது வந்தவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித கினிகே, ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த 3 வது கொவிட் அலையின் தொடக்கத்திலிருந்து புரிந்து கொள்ளல் மற்றும் விரிவான தகவல்களுடனான முன்னேற்றங்களை சுருக்கமாகக் விளக்கினார் மற்றும் ஏப்ரல் பிற்பகுதியிலும் மே மாத தொடக்கத்திலும் கொவிட் தொற்று எவ்வாறு அதிகரித்தது என்பதை விளக்கினார். "மே மாதத்தின் நடுப்பகுதியில் நாங்கள் உச்சத்தை அடைந்தோம். 5 நாட்களாக 3500 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அறியப்பட்டனர். அவற்றில் சில வாரம் வாரமாக அதிகமாகின. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் சிறிய அளவிலான கொவிட் கொத்தணிகளை கண்டறிந்தாலும் நாங்கள் அதைக் கட்டுப்படுத்தி நிர்வகித்த பகுதிகளில் இப்போது வரை சிறப்பாகச் செயற்பட்டுள்ளோம். கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பது மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தல் , பெல்மடுல்ல, குருவிட்ட, தெஹியோவிட்ட மற்றும் திவித்துவ , காலி பகுதிகளில் கொவிட் தொற்று அதிகமாக இருந்தது, நாங்கள் நிலைமையைக் கருத்திற் கொண்டு கட்டுபடுத்தினோம் தடுப்பூசி செயல்முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சதவீதங்களுடன் அவர் கூறினார், மேலும் இந்த முயற்சிகளின் முடிவுகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலே காண முடியும் என்று தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், நோய் தொற்றியல் பிரிவின் வல்லுநர்கள், கொழும்பு மாநகர சபை ஆணையாளர், அரச வைத்தியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பணிக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.