Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2021 09:02:11 Hours

ஓய்வு பெற்று செல்லும் மத்திய தளபதிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு போரில் அதிகமான பங்களிப்பை வழங்கிய கஜபா படையணியின் ஒருவரான ஓய்வுபெறும் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்களை இராணுவத் தளபதி காரியாலயத்திற்கு திங்கட்கிழமை (5) அழைப்பித்து அவரது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ அமைப்புக்கு செய்த சேவையைப் பாராட்டினார்.

காலாட் படை போர் வீரராக மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான போர் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்று மே 2009 க்கு முன்னரான சமாதானத்திற்கான போரை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு தீவிரமாக பங்களித்தவர். ரிவிரச, பலவேகய, திரிவித பலய போன்ற முன்னனி நடவடிக்கைகளில் ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி அச்சமின்றி தனது துணிச்சலைக் காட்டியவர், மேலும் வன்னியில் பயங்கரவாதத்தை வெல்வதற்காக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளில் படையினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கியவர். எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்களின் உச்ச கட்டத்தில் அவர் பல்வேறு நியமனங்களில் கடமையாற்றியவர். அதே நேரத்தில் கஜபா படையணியின் (ஜி.ஆர்) பெருமைமிகு உறுப்பினர் ஆவார்.

சுருக்கமான உரையாடலின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா பழைய நினைவுகளைப் புதுப்பித்து, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகேயுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் இராணுவத்திலும் குறிப்பாக கஜபா படையின் பல முக்கிய நியமனங்களிலும் பணியாற்றியுள்ளார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் (எஸ்.எல்.என்.ஜி) படைத் தளபதியாக அவர் இன்று வரை பதவி வகித்தார். கஜபா படையணி தலைமையக தளபதி, 141 மற்றும் 581 வது பிரிகேட்களின் தளபதியாகவும், அம்பாறை போர்கள பயிற்சி பாடசாலைத் தளபதி , முழு இராணுவத் தலைமையக பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் 14 வது படைப்பிரிவு தளபதி போன்ற நியமனங்களை அவர் 2021 ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமிப்பதற்கு முன்பு வகித்திருந்தார்.

இராணுவத் தலைவர் அவர் இதுவரை செய்த அர்ப்பணிப்பு சேவை மற்றும் அயராத தியாகங்களை நன்றியுடன் ஒப்புக் கொண்டார், மேலும் தளபதி, மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக அவரது சேவையை பாராட்டினார். சந்திப்பின் போது அவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்க போர்க்கள நினைவுகளை நினைவு கூர்ந்தனர் மற்றும் அவர்களின் போர்க்கள சகாக்களில் சிலரை மரியாதையுடனும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் அவர்கள் சந்தித்த கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தனர்.

ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தையும் நினைவு கூர்ந்தார். உரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.