Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2021 13:00:57 Hours

இராணுவ வைத்திய படையினர் பிரதேச வைத்திய படையினருடன் இணைந்து கொவிட் – 19 கட்டுப்பாட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு - அரச வைத்திய அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இராணுவ தளபதி மறுப்பு

தேசிய தடுப்பூசி ஏற்றும் வேதை்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை இராணுவம் இடையூறு விளைவிப்பதாகவும் அனுமதிக்க முடியாத தலையீடுகளை மேற்கொள்வதோடு, மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்குள் அனுமதியின்றி நுழைதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் வைத்திய உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அதன் சமூக வலைத்தளகளில் இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமான விடயங்கள் தொடர்பில் இராணுவம் கவனம் செலுத்தி வியாழக்கிழமை (01) பதிலளித்துள்ளது.

இது தொடர்பிலான கடிதத்தை கௌரவ சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது, கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான செயலணியின் தலைவருக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்ற சுகாதார அதிகாரிகளுக்கும் மேற்படி கடிதத்தின் பிரதியொன்றை அனுப்பி வைக்கானமை கவலைக்குரியதாகும்.

கொவிட் - 19 தடுப்புக்கான செயலணியின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய 2021 ஜனவரி 28 ஆம் திகதி முப்படைகளில் முன்னிலையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. கொவிட் - பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய கொவிட் – 19 தடுப்பு செயலணியின் ஆலோசனைக்கு அமைய வைத்திய நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கத்தின் சுகாதாரத் துறைகளால் முன்னெடுக்கப்படும் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் இராணுவத்தின் மனித வளத்தை குறித்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இராணுவத்தின் விசேட வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் பணிக்குழு மற்றும் வைத்திய ஊழியர்களும் மேற்படி செயற்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைகளுக்கு அமைய மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகளை மையப்படுத்தி தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருடைய ஆலோசனைக்கு இணங்க இராணுவ நிவாரண வைத்திய சுகாதார சேவை பணிப்பகத்தின் நேரடி கண்காணிப்பில் வைத்திய குழுவினரால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , மன்னார் ,வவுனியா சீதாவக்கை, கொக்கலை, அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை கட்டுநாயக்க மற்றும் வத்துபிட்டிவல உள்ளிட்ட பிரதேசங்களில் காணப்படும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் சாதகமான முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் 48 மணி நேரங்களில் நிறைவு செய்யப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

மேற்படி சிறப்பு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 59,898 ஊழியர்களுக்கு துரிதமாக வழங்கப்பட்டதுடன் அதற்காக சுகாதார அமைச்சின் புற்றுநோயியல் தடுப்பு பிரிவினால் 60,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆடைத் தொழிற்சாலை துறையில் சேவை செய்வோருக்கான மேற்படி தடுப்பூசிகளை வழங்கும் முன்னர் பாதுகாப்பு படைகளின் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிளால் மேற்படி திட்டத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதற்கமைய கிழக்கு மாகாணத்தின் சுகாதார பணிப்பாளர், தொற்று நோயியல் நிபுணர்கள் ,பொது சுகாதார அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட துறைசார் மற்றும் பொறுப்பு கூறத்தக்க சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆடை தொழிற்சாலை துறையில் உள்ளவர்கள் சிலருக்கு தடுப்பூசி ஏற்றிக்கொண்டு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்களின் முன்னைய சுகாதார நிலைமைகளே காரணமாகும் என்பதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுவதைப் போல தடுப்பூசிகளை ஏற்றும் இராணுவத்தினர் மீதான தவறுகள் எவையும் இல்லை என்றும் அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை சாதகமாக முன்னெடுப்பதற்கும் உயிர்கொல்லி வைரஸ் பரவலை இல்லாதொழிக்கும் நோக்கத்திலும் மாத்திரமே ஆகும். வேறுவிதமான தலையீடுகள், அனாவசியமான இடையூறுகள் மற்றும் வேறு குறுகிய நோக்கங்களை மையப்படுத்தி மேற்படி செயற்பாடுகளில் தலையீடு செய்யவில்லை. மேலும் இராணுவம் வழங்கி வரும் பங்களிப்புகளை எவ்வித பின்வாங்களும் இன்றி தொடர்ச்சியாக வழங்கும்.

அதனால் இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முழுமையாக இராணுவம் நிராகரிப்பதோடு. எதிர்காலத்திலும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவம் செயற்படுவதுடன் எந்த நேரத்திலும் அண்மைய பகுதிகளிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து கொவிட் – 19 தடுப்புக்கான பணிகளை பின்வாங்களின்றி முன்னெடுக்கவுள்ளது.