Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2021 12:00:26 Hours

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையினரால் தியதலாவையில் சேதன பசளை உற்பத்தி ஆரம்பம்

முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையினரால் பிராந்திய உர உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தியதலாவை பண்ணையில் ஜூன் 25 ம் திகதி சேதன பசளை உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இத்திட்டம் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துன்முல்ல அவர்களின் வழிகாட்டலுக்கமைய முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சீ.எஸ்.தெமுனி, முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஏபிடி பொன்சேகா ஆகியோரால் இத்திட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் சேதன பசளை உற்பத்தியின் நன்மைகள் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கிலும் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் உள்நாட்டு விவசாயிகளுக்கு தங்களுக்கு அவசியமான சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் இராணுவம் எதிர்பார்க்கின்றது.