Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2021 14:12:21 Hours

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்னவின் சேவைக்கு பாராட்டு

இலங்கை பீரங்கி படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுளா கருணாரத்ன அவர்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரினரால் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை (1) இராணுவ தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஓய்வு பெற்றுச் செல்லும் தளபதியின் மூன்று தசாப்த கால சேவை பாராட்டப்பட்டது.

இலங்கை இராணுவ பீரங்கி படையினால் உருவாக்கப்பட்ட பெருமைமிக்க ஒருவரான மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன மிக அண்மைய காலத்தில் 64 வது படைப்பிரிவின் தளபதியாக சேவையாற்றினார். மேலும் சேவைக்காலத்தில் இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கினார். இப்பகுதி பொதுமக்களின் நலன். இராணுவ கிறிஸ்தவ ஒன்றியத்தின் செயலாளராக 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக, வருடாந்த இராணுவ கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைத்தல் மற்றும் மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, தனது மூன்று பீரங்கி பிரிகேட் தளபதி, 642 வது பிரிகேட் தளபதி, 622 வது பிரிகேட்தளபதி , புத்தல அதிகாரிகள் தொழில் வாண்மை மேம்பாட்டு மையத்தின் பிரதி தளபதி, இராணுவ தலைமையகத்தின் உளவியல் பணிப்பக பணிப்பாளர், இராணுவ ஊடகப் பணிப்பகத்தின் கேணல் ஊடகம் மற்றும் இலங்கை பீரங்கி படையணியில் பல முக்கிய நியமனங்களையும் வகித்துள்ளார்.

அவருடனான சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கருணாரத்னவின் அவர்கள் இராணுவத்திற்கு ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டினார். அத்தோடு அவருடன் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். "இராணுவத்தில் உள்ள அனைத்து அணிகளிடையேயும் ஆன்மீக அம்சங்களை மேம்படுத்திய ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக அவர் இருந்தமைக்கும் இராணுவ தளபதி பாராட்டினார். அதேபோல் இராணுவ கிறிஸ்தவ ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக விரிவுரையாளராகவும், சர்வதேச தொடர்பாடல் தொடர்பிலான தெரிவுகளை சகல தரப்பினர்களுக்கும் வழங்குவதற்கான அவரது பங்களிப்புகளையும் இராணுவ தளபதி பாராட்டினார்.

அதனையடுத்து ஓய்வு பெற்றுச் செல்லும் தளபதி தனது சேவைக்காலத்தில் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவ தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்குவிப்புக்கு நன்றிகளை தெரிவித்துகொண்டார். "ஐயா, இராணுவ கட்டமைப்பின் தொழில்வாண்மையை தரமுயர்த்துவதிலும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் நீங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறீர்கள் அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று வெளியேறும் மேஜர் ஜெனரல் இராணுவத் தளபதியிடம் கூறியிருந்தமை சிறப்பம்சமாகும்.

சந்திப்பின் நிறைவில் மேஜர் ஜெனரலின் சேவைகளை பாராட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியின் சேவைக்கு அங்கிகாரமாக நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.