Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2021 11:57:27 Hours

இராணுவ தலைமையகத்தின் புதிய நடவடிக்கை அறையின் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு

பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் மயமான செயற்பாட்டு அறையின் பணிகளை இன்று (29) நேரில் பார்வையிட்டார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவுக்கமைய அதிநவீன புதிய நடவடிக்கை அறை , நவீன சமிக்ஞை பிரிவு மற்றும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் என்பன உரிய வகையில் பொருத்தப்படடிருந்தன. இதன் மூலம் அனைத்து தரைப்படையினரையும் ஒருங்கிணைத்து வரிசைப்படுத்தல் அவசர நிலைமைகள், பேரழிவுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களை தவிர்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

மேற்படி நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அழைக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் புதிய செயல்பாட்டு அறையின் செயற்பாட்டு அம்சம், நவீன உபகரணங்கள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும் பல விளக்கமளிக்கும் காட்சிகளையும் இராணுவ தலைமையக தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின், லெப்டினன்ட் கேணல் ஆர்.சி.விஜேகோண் அவர்களால் காண்பிக்கப்பட்டதுடன், இராணுவ தலைமையகத்தின் பிரிகேடியர் சாந்த ரணவீர அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதே சந்தர்ப்பத்தில், ஜெனரல் ஷவேந்திர சில்வா பொறுப்பான அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நடவடிக்கை அறையின் மற்றைய குழுவினருடன் கலந்துரையாடியதுடன், இராணுவ தளபதியுடன் இணைந்து திட்டமிடல் அறையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார ஆகியோர் வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை வரவேற்றதையடுத்து, வாகன தொடரணிக்கான மரியாதையுடன் புதிய நடவடிக்கை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர அவர்களினால் முதலில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்றதுடன், இலங்கை சமிக்ஞை படையின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.