Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2021 04:00:53 Hours

57 வது படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பான பயிற்சி

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்களின் வழிகாட்டலுக்கமைய சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புனர்வு திட்டங்கள் 57 வது படைப்பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி திட்டத்திற்கு உதவுவதற்காக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் விவசாய பயிற்றுவிப்பு அதிகாரி திரு எஸ்.விஜயன் அவர்களால் 571 பிரிகேட் அதிகாரிகள், சிவில் விவகார அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோருக்கு கொவிட் – 19 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விரிவுரைகளை வழங்கினார்.

மேலும், உயர்தர சேதன பசளை உற்பத்தி செய்யும் செயல்முறையையும், சேதன பசளையை பயன்படுத்தி உயர்தர தயாரிப்புகளைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் விரிவுரையாளர் அறிவுறுத்தினார். மேலும் மண்ணின் நிலை மற்றும் வட. மாகாணத்திற்கு பொருத்தமான பயிர்களை பயிரிடுவது, 1 ஏக்கருக்கான சேதன பசளையின் தேவை அளவு , பயிர்களுக்கு சேதன பசளைகளைப் பயன்படுத்துவதற்கான சரியான முறைகள், களைகளைக் கட்டுப்படுத்தும் இயற்கையான வழி மற்றும் பயிரிடுவதற்கான பொருத்தமான நீர் வசதிகள் போன்றவை குறித்தும் அவர் அனைத்து படையினருக்கும் எடுத்துரைத்தார்.