Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2021 20:55:24 Hours

வவுனியா மாவட்ட அதிகாரிகள் கொவிட் – 19 நிலவரத்தின் முன்னேற்றங்கள் தொடர்பிர் ஆராய்வு

வவுனியா மாவட்டத்தின் கொவிட் – 19 தடுப்பு செயலணியின் இணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையிலான கூட்டமானது, வவுனியா மாவட்ட செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன மற்றும் சில மாவட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (13) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில, 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக்க பெரேரா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்எஸ்பி திஸ்ஸ லால் டி சில்வா, மற்றும் அனைத்து வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நெருக்கமான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொண்டு வேகமான பரவலடைந்து வரும் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது சமூத்திற்குள் வைரஸ் பரவல் உக்கிரமடைந்திருப்பதால் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் எடுத்துரைத்ததையடுத்துடன் சுகாதார வழிமுறைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு பாதுகாப்பு படைத் தளபதி வலியுறுத்தினார்.

மேற்படி கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட பிற விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.