Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2021 15:45:13 Hours

கொவிட்-19 க்கு எதிராக இராணுவம் மற்றும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு ரஷ்ய தூதுவர் பாராட்டு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் மேதகு யூரி பி. மேட்டரி, அவர்கள் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று (7) ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். உலகின் தற்போதைய நோய் தொற்றை ஒழிப்பதற்கான முன்னேற்றங்களையும் அவர் அவதானித்தார். மேலும் அதன் பரவலின் அளவு, தொற்று வீதம் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.

அதற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் கொவிட் -19 தொற்றின் நிலைமை, தடுப்பூசி, தனிமைப்படுத்தல் மையங்களின் நிலமைகள், பயணக் கட்டுப்பாடுகள், கொவிட் நோய் தொற்றை கண்டறிதல் தொடர்பான விவரங்களையும் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கி செல்லும் மூலோபாய மற்றும் குறிப்பிட்ட அணுகுமுறையை விளக்கினார். மேலும், இடை நிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் மேற் கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கமளித்தார்.

கொவிட்-19 தடுப்புக்கெதிராக ரஷ்யா அக்கறையுடன் வழங்கிய பங்களிப்புக்கும் நாட்டில் இராணுவம் மற்றும் ஏனையவர்களால் மேற் கொள்ளப்பட்ட சேவைக்கும் நன்றி தெரிவித்ததோடு, ரஷ்ய மக்களுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இச் சந்திப்பின் இறுதியில் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தலைமையகத்துக்கு வருகை தந்த அரசியல் நிபுணர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்து கொண்ட அவர் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தின் இந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தில் வெளியேறும் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் பாதுகாப்பு இணைப்பாளருமான கேணல் டெனிஸ் ஐ. ஷ்கோட உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பந்திரி அவர்களால் வரவேற்கப்பட்டு தூதுக்குழுவினார் இராணுவத் தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.