Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2021 17:43:53 Hours

கடந்த 24 மணி நேரத்தில் 3,103 தொற்றாளர்கள் பதிவு

இன்று காலை (06) நிலவரப்படி, இலங்கையில் 3,103 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். மீதமுள்ள 3,094 நபர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 828 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 544 தொற்றாளர்களும் , குருநாகல் மாவட்டத்தில் 255 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். ஏனைய 1,467 தொற்றாளர்கள் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (06) நிலவரப்படி, இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 202,356 ஆகும். இவற்றில் 105,026 தொற்றுக்க்கள் புத்தாண்டுக்குப் பின்னர் பதிவாகியுள்ளன.

இன்று (06) காலை 6:00 மணி நிலவரப்படி( கடந்த 24 மணி நேரத்திற்குள்) 1,851 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் இன்று (06) காலை ( கடந்த 24 மணி நேரத்திற்குள்) கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில், இன்று (06) நிலவரப்படி இலங்கையில் கொவிட் -19 தொற்றுக் இலக்காகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (06) ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 53 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,265 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று (06) காலை 0600 க்குள்( கடந்த 24 மணி நேரத்திற்குள்) 12 தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 169 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவு செய்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.