Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 17:01:22 Hours

2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers' Choice & Traveller Review விருதுகளை பெற்றுக்கொண்ட லாயா சபாரி

இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் யால பலதுபனவை தளமாகக் கொண்ட 'லயா சஃபாரி' உல்லாச விடுதியானது, 2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers Choice விருதையும் Booking.com மூலம் வழங்கப்படும் 2020 மற்றும் 2021 ஆண்டிற்கான Traveller Review விருதையும் தொடர்சியாக பெற்றுக்கொண்டது.

'Travellers' Choice விருது' கடந்த ஆண்டு பயணிகளின் மதிப்புரைகளையும் மதிப்பீடுகளையும் பெற்று உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு தொடர்ந்து அருமையான அனுபவங்களை வழங்கும் ஹோட்டல்களுக்கு வழங்கப்படுவதோடு "லாயா சபாரியானது விருந்தினர்களுக்கு சிறந்த சேவையையும் அனுபவங்களையும் வழங்கி சிறந்து விளங்கியதனால் குறிப்பாக இந்த குறித்த சவாலான ஆண்டில் அதற்கு விருது வழங்கப்படுகிறது. "

இதற்கிடையில் கடந்த ஆண்டு தொடர்ந்து விருந்தினர்களிடமிருந்து பல விதிவிலக்கான மதிப்புரைகளைப் பெற்றுக்கொண்ட லாயா சபாரிக்கு Booking.com மூலம் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான 'Traveller Review விருது வழங்கப்பட்டுள்ளதுடன் லாயா சபாரியானது விருந்தினர்களுக்கு வழங்கிய சிறந்த சேவைமூலம் அவர்கள் எந்தளவிற்கு அதனை பாராட்டுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டானது பல சவால்களைக் கொண்ட பயணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட ஒரு ஆண்டாகும். இதன் பொருள் என்னவென்றால், லயா சபாரி பயணிகளுக்கு மிகச்சிறந்த விருந்தோம்பலை வழங்குவதைப் போலவே உங்கள் விருந்தினர்கள் பயணங்களை முன்னெப்போதையும் விட முக்கியமானது என விருது வழங்கிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரயாணிகள் மதிப்பீட்டு விருது செய்தியை விருதுபெற்றுக்கொள்பவரிடம் பகிர வேண்டிக்கொள்ளப்படுவதுடன் (hashtag #TravellerReviewAwards2021 and tag us @booking.com) லயா சபாரியின் விருதை அங்கீகரிக்கும் நம்பமுடியாத விருந்தோம்பல், நடவடிக்கையின் தொழில்துறையை ஒன்றாகக் கட்டியெழுப்ப உறுதியளிக்கும் அதேவேளை அது தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் சுற்றுலாத்துறையின் சமீபத்திய சரிவு இருந்தபோதிலும் பார்வையாளர்களிடமிருந்து சிறந்த கருத்துகளுடன் கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய பயணிகள் மதிப்புரைகள், மதிப்பெண்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தங்கள் விடுமுறை இடங்களுக்கு தேடும் மிக முக்கியமான பயணிகள் முகவர் தளங்களான Tripadvisor and Booking.com ஆகியவற்றிலிருந்து பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு சவால்கள் அனைத்தையும் மீறி மிகச்சிறந்த விருந்தோம்பல் சேவையை வழங்க ஹோட்டல் குழு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த மதிப்பீடுகள் காரணம் என்று லாயா சபாரி & ஸ்பாவின் தலைமை நிறைவேற்று பிரிகேடியர் லலித் ஜெயசிங்க தெரிவித்தார். "லயா சபாரி குழுவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எங்கள் விருந்தினர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள முடிந்த பயணங்களை அதிகம் பயன்படுத்த உதவியது.

சம்பாதித்த விதிவிலக்கான மதிப்புரைகள் மற்றும் மதிப்பெண்கள் நாங்கள் வழங்கிய சேவையை அவர்கள் எவ்வளவு பாராட்டினார்கள் என்பதைக் காட்டுகிறது. விருந்தினர்களிடமிருந்து வரும் இந்த தொடர்ச்சியான பரிந்துரை, எங்கள் போட்டியாளர்களை விட முன்னால் நிற்கவும், எதிர்கால பயணத் திட்டங்களில் லயா சபாரி அவர்களின் விடுமுறை விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பயனளிக்கும், " எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில், லயா சபாரிக்கு Tripadvisor இனால் 'சிறந்த சான்றிதழ்' வழங்கப்பட்டதுடன் 2020 ஆண்டிற்கான Traveller's Choice Award வருதும் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் Hotels.com இனால் (10 இல் 8.6 மதிப்பீட்டைக் கொண்டு) 'Loved by Guests Award Winner 2020' விருது வழங்கப்பட்டது.