Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 16:59:43 Hours

வன்னி தளபதி சிவில்-இராணுவ நல்லிணக்க திட்டங்கள் முன்னெடுப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 563 வது பிரிகேட்டின் அதிகார எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள எட்டம்பகஸ்கட ரஜமகா விகாரையில் படையினரால் நிர்மாணிக்கப்படும் துறவிகள் வாசஸ்த்தலத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்கு 2021 மே மாதம் 21ம் திகதி விஜயம் செய்தார்.

அவர் விகாரையின் தலைமை தேரரை சந்தித்து பிக்குவின் வேண்டுகோளின்படி இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து விசாரித்தார். புதிய வாசஸ்த்தல கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் பாழடைந்த கட்டிடம் தலைமை தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க இடித்து அகற்றப்பட்டது. 7 வது சிங்கப் படை மற்றும் 8 வது பொறியியல் படையினர் கட்டுமானம் மற்றும் அகற்றல் திட்டங்களை முன்னெடுத்தனர்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வெசாக் பௌர்ணமியினை முன்னிட்டு 21 வது இலங்கை சிங்கப் படையினர் விகாரை வளாகத்தை சுத்தம் செய்தனர்.

56 வது படைப்பிரிவு தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 563 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் புனரமைப்பு மற்றும் துப்பரவு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.