Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2021 17:10:13 Hours

காயமடைந்த யானையின் உணவு மற்றும் மீட்பு செயல்முறையினை வழங்கும் படையினர்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேட்டின் 16 வது இலங்கை சிங்கப் படையினர் புதுவிலங்குளம் கிராமத்திற்கு அருகில் சேற்று நிலத்தில் சிக்கி காயமடைந்த கவனிப்பார் அற்று இருந்த யானை தொடர்பாக தகவல் வழங்கியமைக்கு அமைவாக அதன் உடல்நிலையை மேம்படுத்தும் செயல்முறையின் போது உணவு வழங்கி முழு நேரமுமும் கவனித்துக் கொள்கின்றனர்.

வேட்டையாடுபவர்கள் அல்லது துப்பாக்கிதாரி ஒருவரது இலக்கிற்கு சிக்கி காயமடைந்ததாக நம்பப்படும் யானைக்கு 2021 மே மாதம் 09 ம் திகதி முதல் வவுனியா வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் யானைக்கு தொடர்ந்து மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசணைக்கு அமைவாக வருத்தத்தில் இருக்கும் யானைக்கு முதல் நாளில் இருந்து தேவையான இலைகள், தென்னோலைகள், பழங்கள் போன்றவற்றை வழங்கத் தொடங்கினர். பெரும் யானையின் விரைவு மீட்சிக்காக வடக்கிழக்கு பெளத்த துறவிகளின் தலைமைத் தேரர் வணக்கத்திற்குரிய ஆனந்த தேரர் சிறிது சிறிதாக குணமடைந்து வரும் யானையை ஆசீர்வதிக்க அழைக்கப்பட்டார்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, வவுனியா மாவட்டச் செயலாளர் திரு சமன் பந்துலசேன, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால் டீ சில்வா , 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.பி.எஸ்.பி ரத்நாயக்க மற்றும் 16 வது இலங்கை சிங்க படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் எம்பி புஞ்சிஹேவாவும் அந்த இடத்திற்கு வந்து யானையினை படிப்படியாக மீட்டெடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.