Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 22:55:04 Hours

சேற்றில் சிக்கியிருந்த விவசாயிகளின் டோசர் இயந்திரத்தை மீட்பதற்கு இராணுவம் உதவி

கலகெடிஹேன ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் அவசர வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வயல் சேற்றில் சிக்கியிருந்த ஒரு பெரிய டோசர் இயந்திரத்தை அகற்றுவதற்கு வசதிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் செழிப்பின் நோக்கு (சௌபாகிய தெக்ம) ஆவணத்திற்கு ஏற்ப விவசாயிகளின் மறு பயிர்ச் செய்கைக்காக இவ்வுதவி செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் தேசிய மறு பயிரச் செய்கை திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த விவசாயிகள் சங்கம், திட்டமிட்ட மறு பயிரச் செய்கை திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னர் கைவிடப்பட்ட நெல் வயல்களில் ஒரு பகுதியை சீர் செய்ய பெரிய டோசர் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், செயல்பாட்டில் அமர்த்தப்பட்ட இயந்திரம் மழை காரணமாக திடீரென வயல் சேற்று நீரில் சிக்கி முழ்கியதால் அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் விணாகியது.

அவர்கள் அகற்றுவதற்காக உடல் மற்றும் இயந்திர சக்தியைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய விவசாயிகள் சங்கம் நேரடியாக இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு படையினரின் ஆதரவைக் கோரியது.

அதன்படி, ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பொறியாளர்கள் மற்றும் இலங்கை கவச வாகன படையினர் கூட்டாக அந்த இடத்திற்குச் சென்று, செயல்பாட்டைத் திட்டமிட்டு, சேற்று நீரிலிருந்து அதை வெளியேற்றினர். கவச மீட்பு வாகனம் (ARV) மற்றும் இராணுவத்தின் பிற துணை இயந்திரங்களுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அந்தந்த படையினர் நியாயமான எண்ணிக்கையில் ஆதரவு வழங்கினர்.