Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2021 11:16:57 Hours

படையினர் இன்னும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில்

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை சிங்க படையினர் இன்று (5) காலை (5) காலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தை மீட்பதற்காக மாவனெல்ல தேவநாகல பகுதியின் சென்றனர்.

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தொடர்ந்தும் பெய்யும் மழைக்கு மத்தியில் தடைகளை நீக்கி மண்சரிவில் புதையுண்டிருந்த 23 வயதான ஒரு இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு மாவனெல்லை வைத்தியச்சாலைக்கு எடுத்துச் சென்றனர்.

காணாமல்போன அவரது தாய் (56), தந்தை (57) மற்றும் சகோதரர் (29) ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்காக மண்சரிவு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளில் படையினர் தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்கின்றனர்.

படையினர் கிராமவாசிகளுடன் ஒன்றிணைந்து அந்த அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொடர்கின்றனர்.

இதற்கிடையில், வரக்காபொல அல்கம பகுதியில் இன்று (5) காலை ஏற்பட்ட சிறிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மற்றொரு வீட்டின் மீட்பு பணிகளில் 8 வது சிங்க படையினர் ஈடுப்பட்டுள்னர்.

படையினர் அந்த இடத்திற்கு விரைந்து 70 வயதான ஆணின் சடலத்தை மீட்டு வரக்கபொல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அப்பகுதியின் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்னர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 611 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் ஜனக உடோவிட்ட, மற்றும் 8வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.