Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 08:35:29 Hours

கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் இடைநிலைப் பராமரிப்பு நிலையமாக மாற்றம்

இதுவரை இராணுவத்தால் தனிமைப்படுத்தல் நிலையமாக பராமரிக்கப்பட்ட கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் சமீபத்தில் ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் டி.எம். அபேரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் மாற்றப்பட்டது

நாட்டின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை எதிர் கொள்ளும் வகையில் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மைய தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் இடைநிலைப் பராமரிப்பு நிலையங்களை நாடு முழுவதும் அதிகரிப்பதற்காக வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் குறுகிய நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் டி.எம்.அபேரத்ன செவ்வாய்க்கிழமை (1) கந்தக்காடு இடைநிலை பராமரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்தார்.அந்த சந்தர்பத்தில் அங்கு சுமார் 253 கொவிட் -19 தொற்றாளர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர். அங்கு மாற்றத்திற்குப் பிறகும் உயர் தரத்தை பராமரிக்க ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையகத்தின் சில சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.