Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 05:25:27 Hours

கிளிநொச்சி தளபதி பொதுமக்களுக்கான வாழ்வாதார நிவாரண திட்டங்கள் குறித்து ஆராய்வு

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த அறிவுறுத்தல்களுக்கு இணங்க, கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க தனது படையினருடன் பிரதேசத்தின் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வறுமையினை ஒழிப்பதையும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பல வாழ்வாதார நிவாரண திட்டங்களை தொடங்கினார்.

சனிக்கிழமை (29) கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி இராணுவத்தால் நிர்மாணிக்கப்படும் வீட்டு கட்டுமானப் பணி, கோழி பண்ணை திட்டங்கள், பூநகரி உள்ள பனை உற்பத்தி சனசமூக நிலையம் மற்றும் பல சமூக-மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தைக் காண ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அந்த திட்டங்கள் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் போது கிளிநொச்சி பகுதியில் அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை மேம்படுத்த உதவும். 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, 24 வது விஜயபாகு காலாட் படை மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படைகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் அந்த விஜயத்தில் பங்கேற்றனர்.