Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2021 22:09:59 Hours

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு 54 வது படைப்பிரிவு படையினர் விகாரையின் பகுதிகள் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மன்னார் நகரிலுள்ள 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களின் வழிகாட்டுதலில் 54 வது படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் இராணுவ படையினருடன் வெசாக் பௌணமியை முன்னிட்டு 2021 மே மாதம் 26 ம் 27 ம் திகதிகளில் பல வரலாற்று சிறப்புமிக்க செயற்பாடுகளில் இணைந்துக் கொண்டனர்.

'ஸ்ரீ விஜயதிலகாராமயவில் புதிதாக கட்டப்பட்ட புத்த சன்னதி அறை, எத் பாவூரா (யாணை அலங்காரங்களுடனான சுற்று மதில், 'போதி பிரகாரம்', மணிக்ேகாபுரம், பிரசங்க மண்டபம் மற்றும் மன்னார் கொண்டச்சி பிக்கு வாசம் என்பன மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் புத்தரின் நினைவுச்சின்னங்கள் புதிய தாகோபத்தில் பொறிக்கப்பட்டன.

542 வது பிரிகேட்டினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு 542 வது பிரிகேட் தளபதி , அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளால் நன்கொடைகள் வழங்கப்பட்டன.

2021 மே மாதம் 27ம் திகதி தல்லடி 54வது படைப்பிரிவின் தலைமையகத்து மனு விகாரையில் புதிதாக கட்டப்பட்ட முகிழ் அலங்கார மதில் மற்றும் போதி மரத்திற்கான தங்க பாதுகாப்பு வேலி என்பன திறற்து வைக்கப்பட்டன. மனு விகாரையின் சன்னிதானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மிகவும் வணக்கத்திற்குரியது.

தல்லடி முகாமில் உள்ள அனைத்து நிலையினரிடமிருந்தும் சில நலன் விரும்பிகளிடமிருந்தும் பெறப்பட்ட நிதி உதவியுடன் இந்த கட்டுமானங்கள் நிறைவு செய்யப்பட்டன.

சுமார் 1000க்கும் மேற்பட்ட வெசாக் வெளிச்சக்கூடுகள் முகாமினை சூழ மற்றும் சிற்றுண்டி வளாக பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை புனித விழாவிற்கு வண்ணம் சேர்த்தன.

இரண்டு நிகழ்வுகளும் கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களுடன் 54 வது படைப் பிரிவின் கீழ் பணியாற்றும் குறைந்தபட்ச படையினரின் பங்களிப்புடன் நடத்தப்பட்டன.