Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2021 22:14:11 Hours

சுகாதார அதிகாரிகளுடன் இராணுவத்தினர் மீண்டும் தடுப்பூசி ஏற்றும் பணிகளில்

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தலுக்கமைய காலி மாவட்டத்தின் உயன்வத்த, பவரசிறி நிவேராராமய, ரணசேகொட ஸ்ரீ விஜயரமய மற்றும் மாத்தறை கேகந்துர ரஜமஹா விகாரை, அடநிகா கனிஷ்ட பாடசாலை ஆகிய இடங்களில் 29 ம் திகதி முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பு படையினரால் தெற்கு (வடமேற்கு, வடமத்திய, மாகாணம் மற்றும் மத்திய மாகாணம், காலி, மாத்தறை, மாத்தளை, குருணாகல், மற்றும் அநுராதபுரம் பகுதிகளுக்கு தடுப்பூசி வழங்களின் போது முன்னுரிமை அளிக்குமாறு வௌ்ளிக்கிழமை (28) நடைபெற்ற கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றம் தொடர்பான சிறப்புக்குழுவின் கூட்டத்தின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய காலி மாத்தறை மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன், இராணுவ வைத்திய அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ வைத்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையும் (30) முன்னெடுத்தனர். வியாழக்கிழமை (27) தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்பார்வை செய்தார்.

61 படைப்பிரிவின் கட்டளை அலகுகளின் படையினர் மேற்படி பணிகளில் பங்களிப்பு செய்திருந்ததுடன், 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களின் வழிகாட்டலுடனும் 613 பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி விக்கும் லியனகே ஆகியோருடைய ஆலோசனைக்கமைவாகவும் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.